Times of Puducherry

தென் மண்டல வேளாண் மாநாடு: ஐதராபாத்தில் தொடக்கம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 7:39 AM
agriculture

ஹைதராபாத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற தென் மண்டல வேளாண் மாநாட்டில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் GNS ராஜசேகரன் கலந்து கொண்டு புதுச்சேரி விவசாயிகளின் தேவைகள் மற்றும் நலன் சார்ந்த கருத்துகளை கூறினார்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஹைதராபாத்தில்
தென் மண்டல வேளாண் மாநாடு – 2026 நடைபெற்றது. மத்திய அரசு மற்றும் தென் மாநிலங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, நவீன தொழில்நுட்பம், நிலையான வேளாண்மை மற்றும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கமாக அமைந்த இந்த மாநாட்டில் புதுச்சேரி வேளாண்மை துறை அமைச்சர் GNS ராஜசேகரன் கலந்து கொண்டு புதுச்சேரி விவசாயிகளின் தேவைகள் மற்றும் நலன் சார்ந்த கருத்துகளை கூறினார். டிஜிட்டல் வேளாண்மை மற்றும் Farmer Registry, விவசாயிகளுக்கான புதிய தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மை, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு, உயர்மதிப்பு தோட்டக்கலை மற்றும் மதிப்புக்கூட்டல், உர மேலாண்மை மற்றும் தரமான வேளாண் இடுபொருட்கள், வேளாண் உற்பத்தி, சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top