Times of Puducherry

ஏனாம் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 12:06 PM

ஏனாமில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பற்றாக்குறை, காலிப் பணியிடங்கள், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது உள்ளிட்ட பிரச்சினைகளை கேட்டறிந்தார். 1996-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள பழைய கட்டிடங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். ECE, எலக்ட்ரானிக்ஸ், சிவில் துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்க சுமார் ரூ.16 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விரிவான மதிப்பீட்டை இம்மாத இறுதிக்குள் தயாரிக்க உத்தரவிட்டார். கல்லூரியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top