Times of Puducherry
புதுச்சேரியில் வருகின்ற 6-ம் தேதி நடைபெறவிருக்கும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் மற்றும் வேட்புமனு தாக்கல் சம்பந்தமாக புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், பாமக அமைப்பாளர் மதியழகன், முன்னாள் சபாநாயகர் செல்வம், என்.ஆர் காங்கிரஸ், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால் இடைத்தேர்தல் வெற்றி மிகவும் அவசியம், எனவே கூட்டணி கட்சி நிர்வாகிகள் அயராமல் உழைத்து அமோக வாக்கு வித்தியாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம், மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ரங்கசாமி தெரிவித்தார். தவெக ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி கடிதம் கொடுத்திருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அது குறித்த தகவல் இல்லை அறிவிப்பு வரட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.