Times of Puducherry

ஆட்சி அதிகாரம் இருந்தும் தட்டாஞ்சாவடி மக்களுக்கு என்ன செய்தார்கள்? சிந்தித்து வாக்களியுங்கள் - G.நேரு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 1:36 PM
campaign

மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான C.ஜோசப் விஜய் ஆதரவுடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் E.விநாயகம் ஆதரவாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் G.நேரு லட்சுமி நகர் விரிவு, விநாயக முருகன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் அவர் பேசுகையில், இத்தனை ஆண்டு காலமாக தொகுதி பக்கமே எட்டி பார்க்காதவர்கள் தற்போது உங்களிடம் வந்து நான் அப்படி செய்கிறேன் நான் இப்படி செய்கிறேன் தட்டாஞ்சாவடி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று பல உறுதிகள் கொடுப்பார்கள். இத்தனை ஆண்டு காலம் எங்கே சென்றார்கள் இவர்கள் தானே கடந்த காலங்களில் இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்கள் என்ன செய்தார்கள் சிந்தியுங்கள்.

கடந்த 8 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிலிருந்து தொடர்ந்து பல மக்கள் சேவைகளும் மக்கள் பணிகளும் மேற்கொண்டு வரும் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் E.விநாயகம் உங்களின் விலைமதிப்பற்ற பொன்னான வாக்குகளை வரிசை எண் : 3, கை சின்னத்தில் அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top