Times of Puducherry

வாக்குத் திருட்டுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் நூதன போராட்டம் வாக்குத் திருட்டுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் நூதன போராட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 1:15 PM
youth congress-protest-gyanesh kumar

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிராக நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் வெள்ளை நிற முகமூடி அணிந்தும், நீல நிற கையை ஏந்தியும் பங்கேற்றார். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு வாக்குரிமையை இழந்த மக்களை வெள்ளை முகமூடியும், வாக்குரிமையை பாதுகாக்கும் போராட்டத்தின் அடையாளமாக நீல நிற கையும் குறிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பி வருவதாக அவர் கூறினார். நாடு முழுவதும் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தேர்தல் நடைமுறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வாக்குத் திருட்டுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் நூதன போராட்டம் வாக்குத் திருட்டுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் நூதன போராட்டம்

இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக போராடி வரும் நிலையில், தற்போது தங்களது வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறை தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மக்களின் வாக்குரிமை ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்றும், வாக்குப்பதிவு முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலை ஏற்படக்கூடாது என்றும் கூறிய ஆனந்த்பாபு நடராஜன், வாக்குரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க இளைஞர் காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றார். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top