Times of Puducherry
புதுச்சேரி, சிவப்பு கார்ட்டில் இருந்து மஞ்சள் ரேஷன் கார்டுக்கு மாற்றப்பட்டவர்கள் மறு சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தகுதியான சிவப்புரேஷன்கார்டுகள், உரிய விசாரணை மற்றும் கள ஆய்வு மேற்கொள்ளப்படாமல் மஞ்சள் கார்டு வகைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு ஏற்கனவே சிவப்பு ரேஷன்கார்டு வகையில் இருந்து மஞ்சள் கார்டுக்கு மாற்றப்பட்ட ரேஷன் கார்டுகள் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மற்றும் மனுக்கள் அனைத்தும் உரிய முறையில் விசாரிக்கப்படும். சம்பந்தப்பட்டகுடும்பங்களின் உண்மையான தகுதியை மீண்டும் சரிப்பார்க்க துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
மறுசரிபார்ப்பு இனிவரும் காலங்களில் சிவப்பு கார்டு வகையில் இருந்து மஞ்சள் கார்டுக்கு மறுவகைப்படுத்துவதற்கு முன், உரிய கள ஆய்வு மற்றும் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
சம்பந்தப்பட்டரேஷன்கார்டுதாரர்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கி தங்களதுதகுதியை நிரூபிக்கும் ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை சமர்ப்பிக்க வாய்ப்புவழங்கப்பட வேண்டும்.எனவே சிவப்பில் இருந்து மஞ்சள் ரேஷன் கார்டுவகைக்கு மாற்றப்பட்டதில் தங்களுக்கு உரிய தகுதி இருந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதும் குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குறைகளை மனுவாக அளித்து தேவையான ஆவணங்களுடன் மறுசரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.