Times of Puducherry

யாரும் கவலைப்படாதீங்க, நான் நலமாக இருக்கிறேன்: இறந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு வடிவுக்கரசி பதில்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 12:05 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள நடிகை வடிவுக்கரசி மறைந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி நிலையில், இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து அறிமுகமானவர் தான் வடிவுக்காரசி. அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த அவர், ஒரு கட்டத்தில் வில்லி உள்ளிட்ட குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துள்ளார். சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள இவர், சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் வடிவுக்கரசியின் உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரவத் தொடங்கின. அவர் இறந்துவிட்டதாகக் கூட சில பதிவுகள் வெளியாயின. இதனால் அவரது ரசிகர்களும் திரைத்துறை நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் யாரும் கவலைப்படத் தேவையில்லை நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். நல விசாரித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டது குறித்து தனது ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துப் புகழ்பெற்ற மூத்த நடிகை வடிவுக்கரசி, சுமார் 50 ஆண்டுகால கலைப்பயணத்தில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 40-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவுக்கு வரும் முன் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கமல் ஹாசன் நடித்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘முதல் மரியாதை’, ‘படிக்காதவன்’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’, ‘சிவாஜி’, ‘ஜெகமே தந்திரம்’ போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

2000-களின் தொடக்கத்தில் சின்னத்திரையிலும் தடம் பதித்த இவர், ‘அலைகள்’, ‘வம்சம்’, ‘குலதெய்வம்’, ‘கார்த்திகை தீபம்’ போன்ற தொடர்கள் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களிலும் பிரபலமானார். வடிவுக்கரசி கடைசியாக 2026-இல் வெளியான ‘கான் சிட்டி’ (Con City) திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென்னுடன் இணைந்து நடித்தார். சபாபதி தட்சிணாமூர்த்தியைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு சண்முகப்பிரியா என்ற மகள் உள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top