Times of Puducherry

உலகின் முதல் புகையிலை எதிர்ப்பு அருங்காட்சியகம் புதுச்சேரியில் திறப்பு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
9 Sep 2026 • 7:14 PM

புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், மாவட்ட ஆட்சியரகம், சமூகநலத்துறை இயக்கம், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக மருத்துவத்துறை ஆகியவற்றுடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த மாதிரியிலான உலகின் முதல் புகையிலை எதிர்ப்பு அருங்காட்சியகம் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செவ்வேள் திறந்து வைத்தார். தொடர்ந்து 'ஸ்பார்க்-புகையிலை மற்றும் போதைப்பொருள் இல்லா கல்வி வளாகத்திற்கான ஒரு முயற்சி' என்ற திட்டத்தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் ‘ஆரோக்கியமான மாணவர்கள், பிரகாசமான எதிர்காலம்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இளைஞர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்து விவாதிக்கவும், அனுபவபூர்வ புகையிலை எதிர்ப்பு கல்வியில் இந்த தேசிய அளவிலான முதல் சாதனையை கொண்டாடவும் வலியுறுத்தப்பட்டது.- தொடர்ந்து ‘பாதுகாப்பானமனங்கள், ஆரோக்கியமான சமூகங்கள்' என்கையேட்டை சமூக நலத்துறை இயக்குனர் ராகினி வெளியிட்டார். புகையிலை கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றிய உள்ளூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புகையிலை இல்லாகல்வி நிறுவனங்கள் என்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் போதைப்பொருளுக்கு எதிரான வலுவான விழிப்புணர்வு ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கிய இளம் படைப்பாளர்களுக்கு இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் உதயசங்கர் சான்றிதழ் வழங்கினார். முடிவில் புதுச்சேரி அரசு மார்பு நோய் மருத்துவமனையின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட மாநில ஆலோசகர் டாக்டர் சூர்யா குமார். நன்றி கூறினார்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top