Times of Puducherry

எண்ணெய் வளத்தைத் தாண்டி அடுத்த மாஸ்! சவுதி அரேபியாவில் சிக்கிய 'அணுசக்தி பொக்கிஷம்'

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
15 Sep 2026 • 7:10 AM
world story news uranium discovered mecca saudi arabia energy minister madinah

சவுதி அரேபியாவில் பிரம்மாண்ட சாதனை: மதினாவில் 11 கோடி டன் யூரேனியம் மற்றும் அபூர்வ கனிமங்கள் கண்டுபிடிப்பு!

சவுதி அரேபியாவின் மதினா பிராந்தியத்தில் சுமார் 110 மில்லியன் (11 கோடி) டன்கள் எடையுள்ள யூரேனியம் மற்றும் மிக அரிய வகை கனிமங்கள் (Rare Earth Minerals) அடங்கிய பிரம்மாண்ட பாறைப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) 70-வது பொது மாநாட்டில் சவுதி அரேபிய ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார்.

ஜபல் சயீத் திட்டத்தின் சாதனை:

மதினா பிராந்தியத்தில் அமைந்துள்ள 'ஜபல் சயீத்' (Jabal Sayid) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தீவிரப் புவியியல் ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்தப் பெருமளவிலான கனிம வளம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக அளவிலான கணரக அரிய கனிமங்களுடன் (Heavy Rare Earth Elements) இணைந்து குறிப்பிடத்தக்க அளவிலான யூரேனியம் செறிந்து காணப்படுகிறது. உலக அளவில் தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் மிக முக்கிய அரிய கனிம வளப் பகுதிகளில் ஒன்றாக இந்த 'ஜபல் சயீத்' திட்டம் உருவெடுத்துள்ளது.

'விஷன் 2030' மற்றும் அணுசக்தி இலக்கு:

சவுதி அரேபியா தனது பொருளாதாரத்தை கச்சா எண்ணெய் சார்ந்த சார்பிலிருந்து மாற்றியமைக்கும் 'விஷன் 2030' (Vision 2030) திட்டத்தின் ஒரு பகுதியாக, தனது நாட்டின் கனிம வளங்களைப் பெருமளவில் கண்டறிந்து வருகிறது.

சவுதி அரேபியா தனது சிவில் அணுசக்தித் திட்டங்களை சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் மட்டுமே செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் உறுதியளித்துள்ளார். அமெரிக்கா – சவுதி ஒப்பந்தம்: சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தி ஆற்றலை மேம்படுத்துவது தொடர்பாகக் கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே பல பில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த யூரேனியம் கண்டுபிடிப்பு பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சவுதி அரேபியா, தற்போது அணுசக்தி உற்பத்திக்குத் தேவையான யூரேனியம் மற்றும் தொழில்நுட்ப அரிய கனிம வளங்களிலும் பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top