Times of Puducherry
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கூடங்களிலும் மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் கடித எண். P&E2(1)/129/2017, நாள்: 21.08.2026 நாளிட்ட கடிதத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2026 (வெள்ளிகிழமை) அன்று தமிழ்நாட்டில் உள்ள FL- 1/FL-2/ FL-3/ FL-3A / FL-3AA/ FL- 11 உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களும் மூடி மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, கடலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து FL-1 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் FL-2/FL-3 உரிமம் பெற்று இயங்கும் அனைத்து மனமகிழ் மன்றங்கள் மற்றும் மதுபானக் கூடங்களையும் மூடவும், மதுபான விற்பனை மேற்கொள்தல் கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி தினத்தன்று அரசு உத்தரவை மீறி விதிமீறலாக மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்-2, எப்.எல்.3 உரிமதாரர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.