Times of Puducherry

ஓட்டு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொறிக்கும் பணி தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில் நடந்தது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 5:17 PM
vvd-check

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-த் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு
ஓட்டு எந்திரங்கள் தற்செயல் கலப்பு முறையில் தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஓட்டு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொறிக்கும் பணி இன்று லாஸ்பேட்டைமோதிலால்நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. பாதுகாப்பு அறையில் இருந்து எடுத்துவரப்பட்ட ஓட்டு எந்திரங்கள் தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளர்கள் வேட்பாளர்களின் பிரதி நிதிகள் முன்னிலையில் ஒட்டு எந்திரங்களில் பொருத்தப்பட்டது.

இந்த பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன், தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். இதன்பின் அனைத்து எந்திரங்களும் மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top