Times of Puducherry

கைவினைஞர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 7:20 PM
villupuram-collector-apllication-skilltraining

விழுப்புரம் மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGTல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus) மற்றும் தேர்வு கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கான வழிகாட்டுதல் www.skilltraining.tn.gov.in கொள்ள வேண்டும். தேர்வு கட்டணத்தை (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) www.karuvoolam.tn.gov.in e-Challan மூலம் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதனிலைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு (Theory) 26.11.2026 அன்று கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வு 27.11.2026 அன்று நடைபெறும்.

www.skilltraining.tn.govஇணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத 21.09.2026 முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 09.10.2026. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஆட்சித்தலைவர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது விழுப்புரம் மாவட்ட ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top