Times of Puducherry

பிரசாரம், விளம்பரம், கூட்டம்... செலவு பூஜ்ஜியம்; புதுச்சேரி தேர்தல் குறித்து த.வெ.க அளித்த அறிக்கை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
29 Sep 2026 • 9:04 PM
VIJAY TVK reports nil election spending in Puducherry debut

புதுச்சேரியில் தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க), தேர்தல் பிரசாரத்துக்காக எந்தவித செலவும் செய்யவில்லை என தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள தேர்தல் செலவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் 28 தொகுதிகளில் விஜய் தலைமையிலான வெற்றிக் கழகம் (த.வெ.க) தனித்துப் போட்டியிட்டது. இதில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 15 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். கட்சிக்கு 17.6 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

பிரசாரம், விளம்பரம், கூட்டங்களுக்கு செலவு இல்லையா?

இந்நிலையில், தேர்தல் ஆணையாயத்திடம் த.வெ.க சமர்ப்பித்துள்ள செலவு அறிக்கையில், கட்சியின் பொதுப் பிரசாரம், பயணச் செலவுகள், ஊடக விளம்பரங்கள், பிரசாரப் பொருட்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் உள்ளிட்ட முக்கிய செலவினங்கள் அனைத்திலும் ‘Nil’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர்களுக்காகவும் எந்தத் தொகையும் செலவிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், சமூக வலைதள பிரசாரம் மற்றும் பிற பிரசார நடவடிக்கைகளுக்கும் செலவு செய்யப்படவில்லை எனவும் அந்தக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டபோது, அக்கட்சியின் தலைவர் விஜய் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ததாகவும், அந்தப் பிரசாரங்களுக்கான செலவுகளை கட்சியின் தலைமை அலுவலகம் ஏற்கவில்லை என்றும் கட்சி வட்டாரத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.7.02 கோடி வரவு; தமிழகத்தில் ரூ.19.87 கோடி செலவு

த.வெ.க பொருளாளர் வெங்கடரமணன், புதுச்சேரி தேர்தல் தொடர்பான செலவு அறிக்கையை ஜூலை 13-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். கட்சியின் பதிவுகளின்படி, தேர்தல் காலத்தின் தொடக்கத்தில் ரூ.3.02 கோடி இருப்பு இருந்ததாகவும், தேர்தல் காலத்தில் மொத்தம் ரூ.7.02 கோடி வரவு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் தவெக சார்பில் ரூ.19.87 கோடி செலவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்துப் போட்டியிட்ட தவெக, 28 தொகுதிகளில் களம் கண்ட நிலையில், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top