Times of Puducherry
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘மகாராஜா’ தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
துணை நடிகரைாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான படம் மகாராஜா. தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கண்டுபிடிக்கும் அப்பாவின் முயற்சியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நட்டி நடராஜ், முனிஷ்காந்த், மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர்.
குறிப்பாக முக்கிய வில்லன் கேரக்டரில் பாய்ஸ் மணிகண்டன், பாலிவுட் நடிகர் அனுராஜ் காஷ்யப் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் சீனாவிலும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, பாக்ஸ் ஆபிஸில் ரூ.91.65 கோடி வசூல் செய்ததுடன் (Sacnilk தகவலின்படி), ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, படத்தின் ரீமேக் உரிமைக்காக ஹாலிவுட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது அவர்கள் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவரை வைத்து இப்படத்தை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, ‘மகாராஜா’ படத்தின் ஹாலிவுட் ரீமேக்கில் பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானகே நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ‘மகாராஜா’ திரைப்படத்தில், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு குப்பைத் தொட்டி காணாமல் போனதாகப் புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்குச் செல்லும் முடிதிருத்தும் தொழிலாளியின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.
பல திருப்பங்களைக் கொண்ட திரைக்கதைக்காக ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. மேலும், விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா நாமிதாஸ், இப்படத்தின் மூலம் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.