Times of Puducherry
Venus Combustion 2026: செல்வத்தின் அதிபதியாக விளங்கும் சுக்கிர பகவான் செப்டம்பர் 23 முதல் அஸ்தமன நிலையை அடைகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
சுக்கிர அஸ்தமனம் 2026
வேத ஜோதிடத்தின்படி கிரகங்களின் சஞ்சாரங்களும், நிலைகளும் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செல்வம், செழிப்பு, பொன், பொருள், வசதிகள், அழகு, கலை, ஆடம்பரம் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமான சுக்கிரன் விரைவில் தனது நிலையில் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்க இருக்கிறார். பஞ்சாங்கத்தின்படி சுக்கிரன் செப்டம்பர் 23, 2026 அஸ்தமன நிலையை அடைகிறார். சுக்கிரனின் இந்த அஸ்தமன காலம் சுமார் 37 நாட்கள் நீடிக்க இருக்கிறது. இந்த நிகழ்வு 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அடுத்த 37 நாட்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மிதுனம்
சுக்கிர பகவான் மறையும் இந்த நேரம் மிதுன ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சில சவால்கள் ஏற்படலாம். மேலதிகாரிகளுடன் மோதல், சக ஊழியர்களுடன் மனக் கசப்பு ஏற்படக்கூடும். யோசிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுப்பதை தவிர்க்கவும். தொழில் செய்து வருபவர்கள் இந்த காலகட்டத்தில் புதிய அபாயங்களை சந்திக்க நேரிடலாம். மறைமுக எதிரிகள் அதிகரிக்கக்கூடும். நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் பண விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை அவசியம்.
கன்னி
செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அடுத்த 37 நாட்களுக்கு கன்னி ராசிக்காரர்களுக்கு நிலையற்றத் தன்மை நிலவக்கூடும். சுக்கிரனின் செல்வாக்கு குறைவதால், நிதி விஷயங்களில் தடைகள் ஏற்படலாம். பண பரிவர்த்தனைகள் அல்லது புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்னர் மிகுந்த எச்சரிக்கை அவசியம். ஆடம்பரச் செலவுகளும் அதிகரிக்கக்கூடும். வரவு செலவு திட்டத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பெரிய தொகையை கடனாக கொடுப்பதையோ அல்லது கடன் வாங்குவதையோ தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சுக்கிரன் பலவீனம் அடைவதால் உறவுகளில் தவறான புரிதல்கள் அல்லது இடைவெளி ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சிறிய விஷயங்களை பெரிது படுத்த வேண்டாம். எந்த விதமான குடும்ப சண்டைகளையும் அமைதியாக பேசி தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
மீனம்
சுக்கிரன் மறையும் இந்த 37 நாட்கள் மீன ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். உணவு மற்றும் அன்றாட பழக்கத்தில் எந்த ஒரு அலட்சியமும் காட்டக்கூடாது. சிறு அலட்சியம் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். மந்த நிலை, சோர்வு அல்லது சிறு உடல்நலப் பிரச்சினைகள் வந்து நீங்கும். எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் உடல் நலத்தில் முழு கவனம் செலுத்துங்கள். மன அழுத்தத்தை தவிர்க்க யோகா செய்யலாம். நேர்மறை சிந்தனையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
சுக்கிரன் ஏற்படுத்தும் இந்த பாதிப்பில் இருந்து விடுபட மகாலட்சுமி தாயாரை வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, ஏற்படும் தடைகள் விலகும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வதன் மூலம் சுக்கிர அஸ்தமனத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவிற்கு குறைக்க முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.