Times of Puducherry
திருச்சி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் எஸ்சி எஸ்டி விடுதி மாணவர்களுக்கு மாட்டுக்கறி வழங்க வலியுறுத்தி பேசி, இந்துக்களின் உணர்வுகள புண்படுத்திய அமைச்சர் வன்னியரசின் கருத்தை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் கோ. சண்முகம், பாலு ஆகியோர் தலைமை தாங்கினர். தெற்கு மாவட்ட செயலாளர் இவி பெரிய சாமி, கிழக்கு தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் கோபிநாத், தீபக் இளஞ்செழியன், மனச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் தெற்கு கூத்தூர்கணேசன், கிழக்கு சந்தோஷ் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ராசு மூப்பன், மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத், மாவட்ட செயலாளர் சீனிவாசன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஸ்ரீராம் ஓம் இந்து பாதுகாப்பு மகா சபா மாநில தலைவர் மதுபாலன் மாநில பசு பாதுகாப்பு அமைப்பு சசிகுமார் ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் புதிய தமிழகம் கட்சியை தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சமூக விடுதி மாணவர்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தாமல் தான்தோன்றித்தனமாக மாட்டுக்கறி போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் அமைச்சர் வன்னியரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.