Times of Puducherry

பதவி ஆசையால் என்.ஆர் காங்கிரசுக்கு ஆதரவாக அன்பழகன் தேர்தல் பிரச்சாரம்: காங்., எம்.பி வைத்தியலிங்கம் தாக்கு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
29 Sep 2026 • 5:50 PM
vaithilingam-anbalagan-aligation

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் நிரந்தர சபாநாயகர் பதவி கிடைக்கும் என்ற ஆசையால் அன்பழகன் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்:

புதுச்சேரியில் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் புதுச்சேரி மக்களை உலுக்கி உள்ளது, மின்கம்பம் விழுந்து குழந்தை இறக்கும் சம்பவம் என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அரசு இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை, ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தவதிலும் மின் கட்டணத்தை வசூல் செய்வதை தனியாரிடம் ஒப்படைத்து மின்துறையை தனியாருக்கு விற்பனை செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். மாநில முழுவதும் பழுதடைந்த மின் மாற்றிகள் உள்ளது மின்கம்பங்கள் உள்ளது இதையெல்லாம் அரசு சரி செய்யாமல் மெத்தனமாக இருந்து வருகிறது.

தட்டஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இரண்டு கொலைகள் நடைபெறுகிறது. அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குற்றம் புரிபவர்கள் யார் என்று காவல் துறைக்கு தெரியும் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

என்.ஆர்.வெற்றி பெற்றால் தான் தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படும் என்று தொகுதியில் கூறிவரும் ரங்கசாமி கடந்து 5 ஆண்டுகளில் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார். ஏமாற்றத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும், இடைத்தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதுதான் தங்களது நோக்கம் என்று குறிப்பிட்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் பிரச்சாரம் செய்தால் நமக்கு நிரந்தர சபாநாயகர் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையால் அன்பழகன் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், கடந்த ஆட்சியில் இருந்த சபாநாயகரும் இப்போது இருக்கும் சபாநாயகரும் பதவிக்கு உரிய மாண்பை கடைபிடிக்கவில்லை என்றார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top