Times of Puducherry
‘ஆஷா’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் ஆங்கிலத்தில் பேசியது குறித்து நடிகை ஊர்வசி மேடையில் தெரிவித்த கருத்து தற்போது பரபரப்பான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ஊர்வசியின் கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில், தொகுப்பாளரை அவமதிக்கும் வகையில் பேசியது சரியல்ல என்றும் நடிகைக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவது ஊர்வசி. தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வரும் அவர், தற்போது ஆஷா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் லூலு மாலில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசுவதற்காக ஊர்வசி அழைக்கப்பட்டபோது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆங்கிலத்தில் பேசினார்.
அதன்பிறகு பேசிய ஊர்வசி பெரும்பாலும் மலையாளிகள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், ஏன் ஆங்கிலத்தில் ‘கடுகு கிளறுகிறீர்கள்’ என்று ஊர்வசி கேள்வி எழுப்பினார். மேலும், நம் சொந்த நாட்டில் பேசும்போது நம் சொந்த மொழியில் பேசுவது போதுமானதாக இருக்கும் என்றும் ஊர்வசி கூறியிருந்தார். ஊர்வசியின் இந்த பேச்சு குறித்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து பிரபல நடிகர் பிரித்விராஜூவின் மனைவி சுப்ரியா மேனன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆஷா’ திரைப்பட நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பங்கேற்ற தீக்ஷா ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவின் கீழ் சுப்ரியா தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ஆங்கில மொழியைச் சுற்றி தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற விவாதங்கள் தனக்கு எப்போதும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இதேபோன்ற விமர்சனங்களை தானும் எதிர்கொண்டுள்ளதாகவும் சுப்ரியா தெரிவித்துள்ளார்.
“ஆங்கிலத்தைப் பற்றி ஏன் இப்படி தொடர்ந்து சர்ச்சையை உருவாக்குகிறார்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. பொது வெளிக்கு வந்த பிறகு நானும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆங்கில வழிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நமது குழந்தைகளைப் படிக்க வைப்பவர்கள்தானே நாம். வெளிநாடுகளுக்கு வேகமாக குடிபெயர்வதற்கும் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
View this post on Instagram A post shared by Carl Lafrenais (@carllafrenais)
A post shared by Carl Lafrenais (@carllafrenais)
வெளிநாடுகளில் குடியேறிய முக்கிய சமூகங்களில் மலையாளிகளும் ஒருவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்படியிருக்க, ஒருவர் ஆங்கிலத்தில் பேசும்போது மட்டும் ஏன் அதை ஆணவத்தின் அடையாளமாகப் பார்க்கிறோம்? மலையாள மொழி மீதான நமது பெருமையும் அன்பும், ஒருவர் வேறு மொழியில் பேசுவதால் குறைந்துவிடுமா? இதைப் புரிந்துகொள்வது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது,” என்று சுப்ரியா மேனன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற கருத்துகளை நடிகையும் தொகுப்பாளருமான ஸ்ருதி மேனன் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். பொது மேடையில் ஒருவரை அவமதிக்கும் வகையில் பேசாமல், தங்களது கருத்தையும் மொழி மீதான அன்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருந்தது. இதனால், ஊர்வசியின் கருத்து தொடர்பான விவாதம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.