Times of Puducherry

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்: த.வெ.க வேட்பாளர்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா போட்டி

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
10 Sep 2026 • 2:03 PM

மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகித் த.வெ.க-வில் இணைந்தார். அதேபோல, தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தார். இதனால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளும் காலியானதால், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவும் அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் த.வெ.க வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார். தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா த.வெ.க வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார். ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த இருவருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top