Times of Puducherry

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் உலகம் சுற்றுலா தினம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Sep 2026 • 4:09 PM
tourism day

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 27-ஆம் நாள் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுற்றுலா அமைப்பு 2026-ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுலா தின செய்தியாக “செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சுற்றுலாவை மறுவடிவமைத்தல்” என்ற கருத்தை முன்வைத்து உலக அளவில் உள்ள சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையினர் கொண்டாடும் விதமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா 2026 செப்டம்பர் 26 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரை கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புகழ்மிக்க மற்றும் அறியப்பட வேண்டிய சுற்றுலாத்தலங்களை சிந்திக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாபெரும் ஓவியக் கலைவிழா புதுச்சேரி, பாரதி பூங்காவில் 26.09.2026 அன்று காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது. இவ்விழாவில் 300 பள்ளி மாணவர்கள் மற்றும் 50 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை 5.00 மணிக்கு புதுச்சேரி பல்கலைக் கழக சுற்றுலாவியல் துறை மற்றும் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் பங்கேற்ற வண்ணமிகு அணிவகுப்பும், கலைநிகழ்ச்சிகளும் கடற்கரைச் சாலை, காந்தி திடலில் நடைபெற்றது.

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் உலகம் சுற்றுலா தினம்

மேலும், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகமும், புதுச்சேரி ஓட்டல் மேலாண்மை மற்றும் சமையற்கலை தொழில் நுட்பக் கல்லூரியும் இணைந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான “சமையற்கலை போட்டி” நடத்தப் பட்டது. இப்போட்டியில் 50 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். உலக சுற்றுலா தினமான 27.09.2026 இன்று காலை 9.00 மணியளவில் புதுச்சேரி. சன்வே மேனர் ஓட்டலில் சுற்றுலா தொழில் முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஆணையர் மற்றும் சுற்றுலாத் துறை செயலர் Dr. D.மணிகண்டன், இ.ஆ.ப. அவர்கள், சுற்றுலாத் துறை இயக்குநர் திரு K.முரளிதரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, பல்வேறு சுற்றுலா வல்லுநர்கள் பங்குபெற்ற “சுற்றுலா முன்னேற்றம் : சாதனைகளை கொண்டாடுதல், சவால்களை எதிர் கொள்ளுதல் மற்றும் சேவைகளை இணைத்தல்” என்ற தலைப்பில் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் 250-க்கும் மேற்பட்ட புதுச்சேரி ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், சுற்றுலா பயண அமைப்பாளர்கள், சுற்றுலா தொழில் சேவையாளர்கள்,மாணவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், உலக சுற்றுலா தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாளை (செப்டம்பர் 28.2026) புதுச்சேரி, தேங்காய்திட்டு, உப்பளம் மற்றும் கலை மற்றும் கைவினை கிராமம் பகுதியில் உள்ள “மாங்குரூவ் கடற்கரை தூய்மை” பணி 300 தன்னார்வலர்கள் உள்ளடங்கிய, புதுச்சேரி சுற்றுலா படகு இயக்குநர்கள், மை பாரத் குழுவினர். யாக்டோ அமைப்பினர் இணைந்து 28.09.2026 அன்று காலை 6.00 மணியளவில் மேற்கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி தூய்மை பணியாளர்களும் பங்கு பெற்று சேவையாற்ற உள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top