Times of Puducherry
சந்தையின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய பயமின்றி, நிலையான மற்றும் பாதுகாப்பான லாபத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்குப் ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) எப்போதும் சிறந்த தேர்வாக இருக்கிறது. குறிப்பாக, வழக்கமான கால அளவை விட 555 நாட்கள் போன்ற சிறப்பு எப்டி திட்டங்களுக்கு வங்கிகள் கூடுதல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
தற்போது, 555 நாட்கள் கொண்ட சிறப்பு எப்டி திட்டங்களுக்கு சில முன்னணி வங்கிகள் பொதுமக்களுக்கு 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 7.50% வரையிலும் வட்டி அளிக்கின்றன.
முக்கிய வங்கிகளின் 555 நாள் எப்டி வட்டி விவரங்கள்
சிட்டி யூனியன் வங்கி (City Union Bank): பொதுமக்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டியும் வழங்குகிறது.
கர்நாடகா வங்கி (Karnataka Bank): பொதுமக்களுக்கு 7.00% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.40% வட்டியும் வழங்குகிறது.
பரோடா வங்கி (Bank of Baroda): பொதுமக்களுக்கு 6.75% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டியும் வழங்குகிறது.
இந்தியன் வங்கி (Indian Bank): பொதுமக்களுக்கு 6.65% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டியும் வழங்குகிறது.
கனரா வங்கி (Canara Bank): பொதுமக்களுக்கு 6.60% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.10% வட்டியும் வழங்குகிறது.
யூனியன் வங்கி (Union Bank): பொதுமக்களுக்கு 6.55% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.05% வட்டியும் வழங்குகிறது.
இத்தரவுகள் பைசாபசார் தரவுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது. எப்டி கணக்குத் தொடங்கும் முன் அந்தந்த வங்கியின் தற்போதைய வட்டி விகிதங்களைச் சரிபார்ப்பது அவசியம்.
எப்டி வட்டி மீதான டிடிஎஸ் (TDS) வரம்புகள்
வங்கி வைப்புத்தொகை மூலம் ஈட்டும் வட்டி வருமானத்திற்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் டிடிஎஸ் (TDS) பிடிக்கப்படும்.
60 வயதுக்கு உட்பட்ட பொதுமக்கள்: ஒரு நிதியாண்டில் எப்டி மூலம் கிடைக்கும் மொத்த வட்டித் தொகை ரூ. 50,000-ஐ தாண்டும் போது டிடிஎஸ் பிடிக்கப்படும்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்: ஒரு நிதியாண்டில் வட்டி வருமானத்திற்கான டிடிஎஸ் விலக்கு வரம்பு ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மொத்த வட்டி வருமானம் இந்த வரம்புகளை மீறினால் மட்டுமே சம்பந்தப்பட்ட டிடிஎஸ் விதிகள் பொருந்தும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.