Times of Puducherry

Today Rasi Palan: இன்று சகல வளங்களையும் பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்? 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 12:57 PM
today-rasi-palan-sept-25-2026-daily-horoscope-predictions-for-all-12-zodiacs

Today Rasi Palan: செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் 

  • மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் இன்றைய தினம் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
  • பரிகாரம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு, செவ்வரளி மலர் சாற்றி வணங்கவும்.

ரிஷபம்

  • ரிஷப ராசி நேயர்களே இன்றைய தினம் சுக்கிரனின் சாதகமான நிலையால் சுப செய்திகள் வந்து சேரும். பொருளாதார நிலைமை உயரும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.
  • பரிகாரம்: லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும்.

மிதுனம்

  • மிதுன ராசியினர் இன்று புத்தி கூர்மையால் சிக்கலான காரியங்களையும் முடித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். செலவுகள் சற்று அதிகரிக்கலாம். 
  • பரிகாரம்: ஹயக்ரீவருக்கு துளசிமாலை சாற்றி வழிபட மன அமைதி உண்டாகும்.

கடகம்

  • கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மனதில் புதிய உற்சாகமும், அமைதியும் பிறக்கும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும்.
  • பரிகாரம்: சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வில்வ அர்ச்சனை செய்யவும்.

சிம்மம்

  • சிம்ம ராசிக்காரர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை கவனமுடன் செய்வது நல்லது.
  • பரிகாரம்: அம்பிகைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். 

கன்னி

  • கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் சமூகமாக முடியும். இருப்பினும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 
  • பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி தீபம் ஏற்றி வழிபடவும்.

துலாம்

  • துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன மகிழ்ச்சியும், சுறுசுறுப்பும் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை நிகழும். வாகனத்திற்கு செலவு செய்ய நேரிடலாம். 
  • பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி நெய்வேத்தியமாக கற்கண்டு வழங்கி வழிபடவும்.

விருச்சிகம்

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் தடங்கல்கள் வரக்கூடும். எனவே நிதானம் தேவை. வெளிநாட்டு தொடர்புகளால் நன்மை உண்டாகும்.
  • பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வணங்கவும்.

தனுசு

  • தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை உயரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.

மகரம்

  • மகர ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வுகள் தேடி வரலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். தந்தை வழியில் நன்மை உண்டாகும்.
  • பரிகாரம்: சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும்.

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்களுக்கு நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். பணவரவு கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 
  • பரிகாரம்: சிவபெருமானுக்கு மாலை வேளையில் பாலாபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் பெருகும்.

மீனம்

  • மீன ராசிக்காரர்கள் இன்று பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய மனிதர்களை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. 
  • பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்வது ஏற்படும் காரியத்தடைகளை விலக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top