Times of Puducherry
செப்டம்பர் 23, 2026 (புதன்கிழமை) 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மேஷம்இன்றைய தினம் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படும்.பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது சகல நன்மைகளைத் தரும்.
2. ரிஷபம்ரிஷப ராசியினர் இன்று நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாகும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பண விவகாரங்களில் முன்னேற்றம் இருந்தாலும், தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.பரிகாரம்: மகாலட்சுமி தாயாரை வழிபட்டு நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது.
3. மிதுனம்மிதுன ராசியினருக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிட்டும்.பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள்.
4. கடகம்கடக ராசியினருக்கு இன்று மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் நாளாக இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்னர் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.பரிகாரம்: அம்பிகை வழிபாடு சுப பலன்களைத் தரும்.
5. சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.பரிகாரம்: துர்கை அம்மனை வழிபட எதிரிகள் வீழ்ந்து போவார்கள்.
6. கன்னிஇன்று நீங்கள் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அறிவுப்பூர்வமான முடிவுகள் நல்ல பலனைத் தரும். குழந்தைகள் விஷயத்தில் நல்ல செய்தி கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும்.பரிகாரம்: சக்கரத்தாழ்வார் வழிபாடு நன்மைகளைப் பெருக்கும்.
7. துலாம்துலாம் ராசியினருக்கு இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வேலையில் கூடுதல் கவனத்துடன் பணியாற்றுவது சிக்கல்களைத் தவிர்க்கும்.பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை மனதார வழிபடுவது நலம் தரும்.
8. விருச்சிகம்விருச்சிக ராசியினர் இன்று தொட்டதெல்லாம் துலங்கும் இனிய நாளாக அமையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சகோதர/சகோதரிகள் வழியில் ஆதாயம் உண்டு. தொழில் விரிவாக்கம் நிறைவேறும்.பரிகாரம்: முருகப்பெருமானுக்கு தீபமேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யவும்.
9. தனுசுதனுசு ராசியினருக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், அதற்கான உரிய ஊதியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். சுய தொழில் குறித்த பேச்சுக்களில் முன்னேற்றம் காணப்படும்.பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்கள் சாற்றி வழிபடுவது சிறந்தது.
10. மகரம்மகர ராசியினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல செய்திகள் இன்று வந்து சேரும். தொழில் அல்லது வியாபாரம் காரணமாக மேற்கொள்ளும் தொலைதூரப் பயணங்களால் நன்மை உண்டாகும்.பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அல்லது துளசி சாற்றி வழிபடுவது தடைகளை நீக்கும்.
11. கும்பம்கும்ப ராசியினர் இன்று எச்சரிக்கையுடனும், கவனமுடனும் செயல்பட வேண்டிய நாள். புதிய நபர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. வாகன பயணங்களின் போது வேகமாக செல்வதைத் தவிர்க்கவும்.பரிகாரம்: விநாயகருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரியத் தடைகளை அகற்றும்.
12. மீனம்தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத் தகராறுகள் முடிவுக்கு வரும். கூட்டு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.