Times of Puducherry

Today Rasi Palan: செப்டம்பர் 20 (ஞாயிறு) - அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் அந்த ராசிகள் யார்? 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
20 Sep 2026 • 11:31 AM
Today Rasi Palan Sept 20 Daily Horoscope Predictions for all 12 Zodiac Signs

செப்டம்பர் 20, 2026 ஞாயிற்றுக்கிழமை 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

  • மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கதவுகள் திறக்கும். நிலுவையில் இருந்த பணிகள் முடியும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். 
  • பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவது நன்மை தரும். 

ரிஷபம்

  • ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிதானமாக செயல்பட வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பத் தகராறுகளை பேசித் தீர்க்க முயற்சி செய்யவும்.
  • பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது, தடைகளை அகற்றும்.

மிதுனம்

  • மிதுன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பும், உற்சாகமும் நிறைந்து காணப்படுவீர்கள். நண்பர்கள் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். 
  • பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள்.

கடகம்

  • கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பொருளாதார நிலைமை உயரும். தொட்ட காரியங்கள் வெற்றியில் முடியும். சொத்து பிரச்சனைகளில் வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். 
  • பரிகாரம்: சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவது சிறந்தது.

சிம்மம்

  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் ஆற்றலும், மேன்மையும் கூடும். வேலையிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக அமையும். 
  • பரிகாரம்: கோதுமை தானம் செய்வதை யோகத்தைத் தரும்.

கன்னி

  • கன்னி ராசிக்காரர்கள் இன்று திட்டமிட்டு செயல்பட்டால் அனுகூலமான பலன்களைப் பெறலாம். பயணங்களின் போது எச்சரிக்கை அவசியம். செலவு அதிகரிக்கும் என்பதால் பண விஷயங்களில் கவனம் தேவை. பிறர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். 
  • பரிகாரம்: துர்க்கையை வழிபடுவது காரியத்தடைகளை விலக்கும்.

துலாம்

  • துலாம் ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் இனிய நாளாகும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். லாபம் உயரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • பரிகாரம்: மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி தாமரை மலர் சமர்ப்பித்து வழிபடவும்.

விருச்சிகம்

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையும், சுமையும் அதிகரிக்கலாம். ஆனால் அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரலாம்.
  • பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணை அல்லது வடை மாலை சாற்றி வழிபடுவது நன்மை தரும். 

தனுசு

  • தனுசு ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு அமைதி தரும் நல்ல தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வழியாக மகிழ்ச்சி அளிக்கும் செய்திகள் கிடைக்கும்.
  • பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மாலைகள் சாற்றி வழிபட நன்மைகள் பெருகும்.

மகரம்

  • மகர ராசிக்காரர்கள் இன்று சிறிய கவனத்துடன் இருக்க வேண்டும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது குழப்பங்களைத் தவிர்க்கும். 
  • பரிகாரம்: சனி பகவானுக்கு தீபமிட்டு காக்கைக்கு அன்னமிடுவது சுப பலன்களைத் தரும். 

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். 
  • பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. 

மீனம்

  • மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் கை ஓங்கும் நாளாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியிலிருந்து வேலைகள் சிறப்பாக முடியும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து நிதி உதவி கிடைத்து, மன நிம்மதி ஏற்படும்.
  • பரிகாரம்: ஆலயங்களில் உள்ள பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் வழங்குவது சிறந்தது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top