Times of Puducherry
செப்டம்பர் 17, 2026 ஆவணி மாதத்தின் கடைசி நாளான இன்று 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். தொழிலும், வியாபாரமும் பெருகும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானுக்கு சிகப்பு நிற மலர்கள் சாற்றி வழிபடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சுப செலவுகள் வரலாம். வேலையில்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பேசும்பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். தொழில் நிமித்தமான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உடல் நிலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம்: பெருமாளுக்கு துளசி சாற்றி வழிபடுவது சிறந்தது.
கடகம்
நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும் நாளாக இருக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். இன்று நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாட்சி வழிபட தடைகள் அகலும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வரலாம். கவனக்குறைவை தவிர்க்கவும். மதியத்திற்கு பின்னர் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவது புதிய உத்வேகத்தைத் தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் துலங்கும் இனிய நாளாக இருக்கும். நிதிநிலைமை கணிசமாக உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: அம்மன் கோவிலில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு உகந்த நாளாக இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நில மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்திகள் வந்து சேரும். வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்புகள் வரும். கடன் பிரச்சனைகள் குறையும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட பயமும், கவலையும் அகலும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. பயணங்களின் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாற்றி வழிபட வலிமை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் எதிரிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை முடிவெடுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வழக்கு மற்றும் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சகல நன்மைகளைத் தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பிள்ளைகளின் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். சுப காரியத்திற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்: குரு பகவானுக்கு முல்லை மலர் சாற்றி வழிபட யோகம் உண்டாகும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.