Times of Puducherry
Today Rasi Palan: செப்டம்பர் 30 2026 (புதன்கிழமை) அன்றைய தினத்திற்கான 12 ராசிகளின் கிரக நிலைகளின் அடிப்படையிலான ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தொழில் மற்றும் வியாபாரத்தில் சுறுசுறுப்பு தென்படும். நிலுவையில் இருந்த காரியங்கள் முடியும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதிநிலை சீராக இருக்கும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட நன்மைகள் பெருகும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்று மகிழ்ச்சியும், சுப செய்திகளும் தேடிவரும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம்: ஹயக்ரீவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரிய சித்தி பெறுவீர்கள். பேச்சுத் திறமையாலே அனைத்து காரியங்களையும் சாதிப்பீர்கள். புதிய முதலீடுகள் செய்வதை இன்றைய தினம் தவிர்க்கவும்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுங்கள்.
கடகம்
கடக ராசியினருக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான குறுகிய பயணங்கள் பயனுள்ளதாக அமையும். பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவது மன அமைதியைத் தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை மேன்மையடையும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஒரு காரியம் இன்று நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது குடும்பத்தில் சமூகமான சூழலைத் தரும்.
பரிகாரம்: அம்பிகைக்கு வெள்ளை மலர்களால் அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் அனைத்தும் கைகூடும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இருப்பினும், பணிச்சுமை காரணமாக சோர்வு ஏற்படலாம். தேவையான ஓய்வு அவசியம்.
பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கதவை தட்டும் நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் உருவாகும். கலை மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட தடைகள் அகலும்
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் விடாமுயற்சியால் நினைத்த இலக்குகளை அடைவீர்கள். சொத்து விவகாரங்களில் சாதகமான போக்கை காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வாகன பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது.
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி கவசம் படித்து வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சுப செலவுகள் வரலாம். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சவாலான காரியத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். தொழில் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய திட்டங்களை தொடங்குவீர்கள். பழைய கடன்கள் அடையும் வாய்ப்பு உண்டு. பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை.
பரிகாரம்: சனி பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கலாம். ஆரோக்கியத்தில் சிறு கோளாறுகள் தோன்றி மறையலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாற்றி வழிபடவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். மனதில் அமைதியும், நிம்மதியும் நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். யாருக்கும் யோசிக்காமல் வாக்குறுதி அளிக்க வேண்டாம்.
பரிகாரம்: பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் கொடுத்து வழிபடவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.