Times of Puducherry

Today Rasi Palan: இன்றைய ராசி பலன் (16-9-2026) - மேஷம் முதல் மீனம் வரை.! 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 8:15 AM
Today Rasi Palan daily horoscope predictions for sep 16 2026 all 12 zodiac signs

Today Rasi Palan: இன்று செப்டம்பர் 16 (புதன்கிழமை) மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான முழு பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று தொடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். வேலை அல்லது தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கார்ரகள் இன்று மிகவும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். திடீர் மருத்துவச் செலவுகள் அல்லது வீண் அலைச்சல்கள் வரலாம். பேச்சில் நிதானம் தேவை.

பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபடுங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

பரிகாரம்: புதன் கிழமையான இன்று நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தேங்கி கிடந்த பணிகள் வேகம் பெறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் திடீர் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரிடம் அனுசரணையுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்: ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடுவது நல்லது.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்று சிறப்பான நாள். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் இருந்த போட்டிகள் குறையும், லாபம் பெருகும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும்.

பரிகாரம்: மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

விருச்சிகம்

இன்று மனதில் சிறு குழப்பங்கள் வந்து செல்லும். குடும்ப விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பதை இன்று தள்ளிப்போடுவது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தமான நல்ல செய்திகள் வரும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட குழப்பங்கள் தீரும்.

தனுசு

தனுசு ராசியினர் இன்று எச்சரிக்கையாக இருக்கவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பணியிடத்தில் அதிக வேலைப்பளு இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடவும்.

மகரம்

இன்று மகர ராசியினருக்கு சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். வெகு நாட்களாக தடைபட்ட அல்லது நின்றுபோன காரியம் சிறப்பாக முடியும். நிதி நிலைமை மேம்படும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட காரிய சித்தி உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஜெயம் உண்டாகும் நாளாக அமையும். தொட்ட காரியங்களை தடையின்றி முடிப்பீர்கள். தொழிலில் லாபகரமான ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகருக்கு தேங்காய் தீபமேற்றி வழிபட தடைகள் நீங்கும்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று சுபச் செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகும். தொழில் விரிவாக்கம் நடக்கும். சுப காரியங்கள் நடைபெறும்.

பரிகாரம்: ராகவேந்திரரை வழிபடுவது நன்மைகளை பெருக்கும்.

(பொதுவான குறிப்பு: கிரக நிலைகளின் அடிப்படையில் கூறப்படும் பொதுவான பலன்கள் இவை. தனிநபரின் சுய ஜாதக தசாபுத்திகளுக்கு ஏற்ப பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top