Times of Puducherry

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: செப்.15 முதல் தொடக்கம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
14 Sep 2026 • 10:11 AM

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நாளை ஏழுமலையானின் தளபதி விஸ்வக் சேனர் கோவில் வளாகத்தில் வீதி உலா வந்து விழா ஏற்பாடுகளை பார்வையிடும் வைபவம் நடக்கிறது அதே நாளில் வேத அறிஞர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மந்திர உச்சரிப்புகளுக்கு மத்தியில் பூமி பூஜை நடக்கிறது மண் சேகரிக்கப்பட்டு யாகசாலை அமைக்கப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மாநில அரசின் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வைக்கப்பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார் பிரமோற்சவ விழா நாட்களில் காலை 8 மணி மணிக்கும் இரவு 7:00 மணிக்கு தினமும் நாலு மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் வருகிற 19ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு தங்க கருட சேவை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறுகிறது. இருபதாம் தேதி தங்கரதம் 22 ஆம் தேதி ரத உற்சவம் 23ஆம் தேதி காலை ஆறு மணிக்கு புஷ்பகரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் மாலை கொடி இறக்கத்துடன் பிரம்ம உச்சி விழா நிறைவு பெறுகிறது பிரம்மோற்சவ விழா நடைபெறும் நாட்களில் திருப்பாவாடை ,கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம் சேவை சகஸ்ர தீப அலங்கார சேவைகள். இதேபோல் விஐபி இடைவேளை தரிசனங்கள் நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பச்சிளம் குழந்தைகளின் பெற்றோர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது திருப்பதியில் நேற்று 81724 பேர் தரிசனம் செய்தனர் 38 161 முடி காணிக்கை செலுத்தி உள்ளனர் .

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top