Times of Puducherry

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்: புரட்டாசி உற்சவம் இன்று முதல் தொடக்கம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 6:49 PM
thiruvathi

நெய்தீப ஒளியில் மூலவர் மலையப்பனாக பக்தர்களுக்குஅருள்பாளித்து வருகிறார். பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது சரநாராயண பெருமாள் கோவில் இது மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு புரட்டாசி உற்சவம் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது புரட்டாசி மாதம் முழுதும் மூலவர் திருப்பதி திருமலை சீனு வாச பெருமாளாக நெய் தீப தரிசனத்தில் அருள் பாலிக்கிறார்.

விழாவையொட்டி புரட்டாசி மாதம் முழுதும் காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 6:15 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், காலை 7:15 முதல் 9:00 மணி வரை தோமாலை சேவை, காலை 10:00 மணிக்கு உற்சவர் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை,அமாவாசை பௌர்ணமி தவிரநடக்கிறது. பகல் 11:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5:30 மணிக்கு விஷ்ணுசகஸ்ர நாம பாராயணம், மாலை 6:00 மணிக்கு சாயங்கால தோமாலை சேவை, இரவு 8:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பட்டாச்சாரியார் திரிபுரா ராமன் பட்டர்தலைமையில் விழா குழுவினர் உற்சவதாரர்கள் கிராம மக்கள் கோவில் நிர்வாகித்தனர் செய்து வருகின்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top