Times of Puducherry

அரியர்ஸ் வைத்துள்ள முன்னாள் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
12 Sep 2026 • 9:56 AM

2002 முதல் 2020 வரை திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் அரியர்ஸ் வைத்திருந்தால் மீண்டும் எழுதலாம். திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில்பயின்று பாடங்களில் தேர்ச்சி பெறாமல் நிலுவையில் (Arrear) வைத்துள்ளமுன்னாள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்புத் தேர்வு நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துறைகள் (University Departments) மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் (Affiliated Colleges) 2002-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை சேர்க்கை பெற்ற இளங்கலை (UG) மற்றும் 2002-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை சேர்க்கை பெற்ற முதுகலை (PG) மற்றும் தொழில்முறைப் படிப்பு (Professional Courses) மாணவர்கள் அனைவரும் இத்தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள். தகுதியுடைய மாணவர்கள் இணையதளமான www.coe.tvu.edu.in வாயிலாக மட்டுமே 17.09.2026 (வியாழக்கிழமை) நாளிலிருந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், தேர்வுக்கான கட்டண விவரங்கள்,தேர்வு மையங்கள் மற்றும் விரிவான கால அட்டவணை ஆகியவை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top