Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.அசோக் ஆனந்து போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு
செய்வது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதுவை மாநில தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனைநடத்தினர்.புதுவை மாநில பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா, அவைத்தலைவர் பி. சிவக்குமார், எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. வேட்பாளராக சேது செல்வத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணி தி.மு.க.வுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டதால் த.வெ.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தமிழகம், புதுவை இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணியை அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் த.வெ.க. ஆதரவுடன் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு 2-வது இடம் பெற்ற நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம், அந்த கட்சி தலைவர் நேரு, புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினர். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு சென்ற நேரு எம்.எல்.ஏ. அந்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். த.வெ.க. ஆதரவுடன் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணி சார்பில் விநாயகம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.