Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக தலைமை தேர்தல்
அதிகாரி அறிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதி புதுச்சேரி தலைமைதேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தட்டாஞ்சாடி தொகுதிக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வந்துள்ளது. தேர்தல் நடைமுறைகள் முழுமையாக அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி வரை அமலில் இருக்கும். இந்த தேர்தல் நடத்தை விதிகள் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் பொருந்தும்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து வேட்பாளர்கள், அரசு மற்றும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி பகை, விரோதம் மற்றும் கசப்புணர்வுக்கு இடமளிக்காத வகையில் சுதந்திரமான, தேர்தல் அரசு நேர்மையான மற்றும் அமைதியான முறையில் தேர்தல்நடைபெற முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். ஊழியர்கள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. மீறும் அரசு ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாரபட்சமின்றி நடவடிக்கை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினர் உள்பட அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும், எவ்வித அச்சமோ அல்லது பாரபட்சமோ இன்றி நடுநிலையான முறையில் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டும். அவர்களின் பணித்திறன் தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். கடந்த 1.1.2026 தேதியை தகுதிநாளாககொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி 14-ந்தேதிவெளியிடப்பட்டது. இருப்பினும் வாக்காளர் பட்டியலை தொடர்ந்து புதுப்பிக்கும் பணியானது வேட்புமனு தாக்கல் செய்தவற்கான கடைசி நாள் வரை தொடரும். கடந்த ஜூலை 1-ந்தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பரிசீலிக்கப்படும். வாக்குப்பதிவு எந்திரம் இடைத்தேர்தலுக்கு போதுமான எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிப்பார்ப்பு காகித சோதனை சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு எந்திரங்கள் உதவியுடன் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.வாக்காளரின் அடையாஎத்தை உறுதிசெய்வதற்கானமுக்கிய ஆவணமாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைஇருக்கும். இதுதவிரஇந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையும் வாக்குச்சவாடியில் காண்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.