Times of Puducherry

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
7 Sep 2026 • 8:07 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இப்போது வாய்ப்பில்லை என்று அரசியல் கட்சிகள் கூறிவந்த நிலையில் இன்ப அதிர்ச்சியாக வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு வாக்குப்பதிவும் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் திடீரென்று தேதியை அறிவித்ததால் புதுச்சேரியில் உள்ள திமுக காங்கிரஸ் தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் குழப்பத்தில் உள்ளது ஆனால் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே தட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார் என்றும் அவருக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இன்று முதலே தட்டாஞ்சாவடி தொகுதியில் களம் இறங்கும் அசோக் ஆனந்த் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்கிறார், ஆனால் இதுவரை தேர்தலுக்கான ஆயத்த பணிகளையும் வேட்பாளர் யார் என்று இறுதி செய்யாமலும் திமுக காங்கிரஸ் மற்றும் தவெக கட்சிகள் உள்ளது. இதனால் இந்த கட்சிகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் சொற்ப இடங்களிலே திமுக வெற்றி பெற்ற தோல்வியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.அதே போன்று காங்கிரஸ் கட்சியும் ஒரு இடத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி தோல்வி அடைந்தது தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் டெபாசிட் இழந்தார் இந்த நிலையில் அதே தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விநாயகம் இரண்டாவது இடத்தை தக்க வைத்தார்.

அதே நிலையில் கடுமையான போட்டியில் தட்டஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, நடந்து முடிந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டனியாக இருந்து தேர்தலை சந்தித்தது. தற்போது இரண்டு கட்சிகளும் இரு வேறு அணியாக உள்ளது திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் சந்தித்த காங்கிரஸ் இந்த முறை தவெக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.மேலும் தவெக காங்கிரஸ் கூட்டணியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அது காங்கிரஸ் வேட்பாளரா அல்லது தமிழக வெற்றிக்கழக வேட்பாளரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திமுகவுடன் எந்த கட்சிகளும் கூட்டணி இல்லாத நிலையில் திமுக கண்டிப்பாக தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவது உறுதியாகி உள்ளது. மேலும் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த பிரபலமான முக்கிய நபர் ஒருவர் சீட்டு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அல்லது திமுக மாநில அமைப்பாளர் சிவா மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடலாமா என்றும் திமுகவினர் யோசனை செய்து வருகின்றனர்.

அதே நிலையில் தவெக காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்து வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் திமுகவின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது, ஆனால் இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் தட்டஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்று வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் ஆனார் என்ற நிலையும் உள்ளது. தற்போது உள்ள நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியை மீண்டும் திமுக தக்க வைக்குமா அல்லது கோட்டை விடுமா என்பது போக போக தான் தெரியும் எது எப்படி இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இது அந்த தொகுதி மக்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் தான். வரும் 9-16-ம் தேதி மனு தாக்கல்…17-ம் தேதி பரிசீலனை…19 -ம் தேதி வாபஸ்…அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top