Times of Puducherry

தமிழ்நாடு மக்களின் பெரிய நம்பிக்கை: அடுத்து வரும் ஆண்டுகள் சிறப்பாக அமைய வேண்டும்: விஜய் குறித்து பேசிய நானி

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 6:32 PM

‘தி பாரடைஸ்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்திருந்த நடிகர் நானி, தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜயின் அரசியல் பயணம் குறித்தும் அவர் பேசினார். மேலும், வெற்றிபெறும் தென்னிந்தியப் படங்கள் “பான் இந்தியா” படங்கள் என்று அழைக்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பிய நானி, இந்த வார்த்தைப் பயன்பாடு இந்தி சினிமாவுக்கு அதே விதத்தில் பயன்படுத்தப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நானி, சினிமாவில் இருந்து அரசியலுக்கு மாறி இருக்கும், விஜய்க்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொடர்பு அவரது சினிமா நட்சத்திர அந்தஸ்தையும், வசூல் வெற்றியையும் தாண்டியது என்று கூறினார். பல ஆண்டுகளாக மக்களிடையே விஜய் உருவாக்கியுள்ள பரிச்சயம் மற்றும் நம்பிக்கையையும் அவர் குறிப்பிட்டார்.

இது அவரது நட்சத்திர அந்தஸ்து அல்லது வசூல் வெற்றியைப் பற்றி மட்டும் அல்ல. பல ஆண்டுகளாக தமிழக மக்கள் விஜய் சாருடன் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளனர். அவரை தங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒருவராக அவர்கள் உணர்கிறார்கள். அவர் தங்களது குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர் என்றும் நினைக்கிறார்கள். அவர்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இது தெளிவாகக் காட்டுகிறது.”

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜயின் செயல்பாடுகள் நான் ஆன்லைனில் பார்த்த வரையில், அவர் சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது ஆட்சியின் அடுத்த சில ஆண்டுகள் சிறப்பாக அமைய வேண்டும், விஜயைத் தேர்வு செய்ததில் தமிழக மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் நானி, விஜய்க்கு பொதுவெளியில் வாழ்த்து தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், விஜயின் அரசியல் வெற்றியை “பின்தங்கிய நிலையில் இருந்த ஒருவர் வெற்றி பெற்ற தருணம்” என்று குறிப்பிட்ட அவர், தமிழக மக்களுக்கு சாதகமான மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட வேண்டும் என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.
அந்த வாழ்த்துச் செய்தி வெளியான சில மாதங்களுக்குப் பிறகு, ‘தி பாரடைஸ்’ படத்தின் சென்னை புரமோஷன் நிகழ்ச்சியில் நானி தற்போது விஜய் குறித்து மீண்டும் பேசியுள்ளார்.

தென்னிந்தியப் படங்களுக்கு ‘பான் இந்தியா’ என்ற பெயர் ஏன்? – என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், வெற்றிபெறும் தென்னிந்தியப் படங்கள் பெரும்பாலும் “பான் இந்தியா” படங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், வெற்றிபெறும் இந்திப் படங்கள் பொதுவாக “இந்திப் படம்” என்றே குறிப்பிடப்படுகின்றன.

ஒரு இந்திப் படம் சிறப்பாக வெற்றி பெற்றால், அதை இந்திப் படம் என்றுதான் அழைக்கிறோம். ஆனால், ஒரு தென்னிந்தியப் படம் வெற்றி பெற்றால், அதை பான் இந்தியா படம் என்று அழைக்கிறோம். எனவே, எனது படங்களை பான் இந்தியா படங்கள் என்று அழைக்க நான் விரும்பவில்லை.

பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ரசிகர்களை தனது படங்கள் சென்றடைகின்றன என்பதற்காக மட்டுமே அவற்றுக்கு “பான் இந்தியா” என்ற அடையாளத்தை வழங்க வேண்டாம் என்பதே நானியின் நிலைப்பாடாக அவரது இந்தக் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.

நானி தற்போது ‘தி பாரடைஸ்’ படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் ‘தசரா’ திரைப்படத்திற்குப் பிறகு நானி மீண்டும் இணைந்துள்ள படம் ‘தி பாரடைஸ்’.இந்தப் படத்தில் நானியுடன் மோகன் பாபு, கயாது லோஹர், சோனாலி குல்கர்னி மற்றும் ராகவ் ஜுயல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஒடேலா கதை எழுதி இயக்கியுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top