Times of Puducherry
ஜிப்மரில் காசநோய்க்கான மேம்பட்ட மரபணு அடிப்படையிலான பரிசோதனைகள் குறித்த தேசிய மாநாடு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி காசநோய்க்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அடுத்த தலைமுறை மரபணு வரிசைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து உணர்திறன் பரிசோதனை (Universal Drug Susceptibility Testing – UDST) மேற்கொள்வது தொடர்பான தேசிய மாநாடு கொள்கை ஜிப்மர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அரங்கில் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஏ. கே. டி, ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, பாலிசி ரெசிலியன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் நந்திஷ் ஆர். பேத்தானி, புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறைச் செயலர் . எல். குமார், புதுச்சேரிசுகாதாரம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் இயக்குநரும், தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ். செவ்வேல், ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் தேசியப் பணிக்குழுத் தலைவர் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் நிறுவனத்தின் சமூக மருத்துவத் துறைத் தலைவருமான டாக்டர் அனில் ஜேக்கப் பர்த்தி, ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையின் மாநாட்டு ஏற்பாட்டுத் தலைவி டாக்டர் சோனாலி சர்க்கார், ஜிப்மர் நுரையீரல் மருத்துவத் துறையின் மாநாட்டு ஏற்பாட்டுச் செயலாளர் டாக்டர் தர்ம பிரகாஷ் திவேதி, ஜிப்மர் செவிலியர் கல்லூரியின் பேராசிரியரும் (பொறுப்பு) முதல்வரும், துணை முதல்வருமான டாக்டர் எம். ஜே.குமாரி மற்றும் மூத்த அரசு அதிகாரிகள், பொது சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
செப்டம்பர் 23 முதல் 25 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இத்தேசிய மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், பொது சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மரபணு அறிவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பங்குதாரர்கள் பங்கேற்று, காசநோயில் மருந்து எதிர்ப்பைக் கண்டறிதலை வலுப்படுத்துதல் காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் மேம்பட்ட மரபணு தொழில்நுட்பங்களை பற்றி பேசினார்.
முதலமைச்சர் என். ரங்கசாமி, காசநோயை முழுமையாக நீக்குவதற்காக புதுச்சேரி அரசு, மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், காசநோய் ஒழிப்பு மத்திய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். புதுச்சேரியில் காசநோய் பாதிப்பு 201 பாதிப்பு , 2015 முதல் 2021ஆம் ஆண்டு காலகட்டத்தில் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், காசநோய் ஒழிப்புப் பணிகளில் சுகாதாரத் துறையின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.