Times of Puducherry

ரூ.1,000 கோடி மதிப்பில் 2 திட்டங்கள்: 2,600 வேலைவாய்ப்புகள்: முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
14 Sep 2026 • 8:41 PM

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) அமைத்து விரிவுபடுத்துவதற்காக இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் சுமார் ரூ.1,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், 2,600-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் க்ளோபல் கேபப்பிளிட்டி செண்டர் (GCC) அமைக்க உள்ள இங்கிலாந்து நிறுவனம்

தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான கைடன்ஸ் எர்ன்ஸ்ட் மற்றும் யங் (Guidance, Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த க்ளோபல் கேபப்பிளிட்டி செண்டர் (GCC) சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் அமைக்கப்பட உள்ள க்ளோபல் கேபப்பிளிட்டி செண்டர் வழித்தடத்தில் செயல்பட உள்ளது. இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, திருச்சி மையங்களை விரிவுபடுத்தும் சிக்மா டெக்னாலஜி (Sigma Technology)

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குருப் நிறுவனம், தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொலியூஷன் (Sriya Solutions) மூலம் சென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்காக கைடன்ஸ் (Guidance) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் எம்பெடெட் சிஸ்டம்ஸ் (Embedded Systems), மின்மயமாக்கல் (Electrification) மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல் (Industrial Digitalisation) ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 600 உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய், சிக்மா டெக்னாலஜி குருப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா சொல்யூஷன் (Sriya Solutions) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் கைடன்ஸ் (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், ஐஏஎஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, ஐஎஃப்எஸ், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top