Times of Puducherry

சித்திரை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்.! அளவில்லாத நன்மைகள் பெறப்போகும் 4 ராசிகள்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 12:41 PM
sun transit in Chithirai Natchathiram brings luck and wealth for 4 zodiac signs

Sun Transit in Chithirai Natchathiram: சூரிய பகவான் விரைவில் சித்திரை நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக 4 ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சூரியன் சித்திரை நட்சத்திரப் பெயர்ச்சி

சூரிய பகவான் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் தனது ராசியை மாற்றும் பொழுதும் தமிழ் மாதங்கள் பிறக்கிறது. அந்த வகையில் அவர் கன்னி ராசியில் நுழைந்துள்ளதால் புரட்டாசி மாதம் பிறந்துள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். சித்திரை நட்சத்திரம் செவ்வாய் பகவானுக்கு உரிய நட்சத்திரமாகும். செவ்வாயும், சூரியனும் நட்பு கிரகங்கள் என்பதால் இது சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கவுள்ளது. சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்

மேஷ ராசியை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். சித்தரை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலம் உங்களுக்கு தைரியம், வீரம், தன்னம்பிக்கை ஆகியவற்றை அதிகரிக்கும். கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.

உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகளை தோற்கடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து முழு விடுதலை கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை சீராகும். தொழில் தொடர்பான வெற்றிகள் சாத்தியமாகும்.

கடகம்

சூரிய பகவான் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கடக ராசிக்கு தன்னம்பிக்கையும், செல்வாக்கும் உயரும். உங்களுடைய பேச்சின் மூலமாகவே வெற்றிகளைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வலுவடையும். எதிர்பாராத நிதி ஆதாயம் பெறுவீர்கள். முன்னர் செய்த முதலீடுகள் தற்போது லாபம் தரத் தொடங்கும்.

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் நன்மை தரும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய காலகட்டமாகும். தேர்வுகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி சுப தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்கள் கைக்கு வர வேண்டிய பணம் சரியான நேரத்தில் வந்து சேரும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டுக்கள் கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். கிடப்பில் கிடந்த வேலைகள் மீண்டும் வேகமெடுக்கும். சுய தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக முன்னேற்றம் தரக்கூடிய காலம் உருவாகி உள்ளது. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். விற்க முடியாமல் இருந்த சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும்.

புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஒட்டுமொத்தமாக வெற்றி அதிகரிக்கும் காலமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top