Times of Puducherry

சிறப்பு தீவிர திருத்த (SIR) தவறிய நபர்களுக்கும் சிறப்பு முகாம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 9:07 PM
SIR-special camp

புதுச்சேரியில் வாக்காளர் திருத்தப் பணியின் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என தலைமை தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளரிடம் கூறியதாவது:

சிறப்பு தீவிர திருத்தநடைமுறையின்போது தங்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளத் தவறிய நபர்களுக்கும், தற்போது வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யத் இளம் குடிமக்களுக்கும் வசதியளிக்கும் வகையில், புதுச்சேரி முழுவதும் சிறப்பு சேர்க்கை இயக்கத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தொடங்கியுள்ளது. நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தது இரண்டு இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

சிறப்பு முகாம்களின் தேதி, நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்கள் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் (DEOS) தெரிவிக்கப்படும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் (EROS) மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOS), வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க தேவையான உதவிகளை செய்வார்கள். கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விடுதிகள் மற்றும்
பிற நிறுவனங்களில், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விழிப்புணர்வு செய்து வாககாளர் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யத் தகுதி பெற்றுள்ள இளம் குடிமக்கள், தங்களது வாக்காளர் பதிவு நிலையை சரிபார்த்து, தேவையான இடங்களில் வாக்காளர் பதிவு அணுகி உதவி பெறுமாறு அலுவலர்களை கேட்டுக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி திருத்த (SIR) நடைமுறை நிறைவடைந்துள்ளதால், இனி பெறப்படும் விண்ணப்பங்கள், வாக்காளர் பட்டியலின் தொடர்ச்சியான புதுப்பித்தலுக்கு (Continuous Updation) பொருந்தக்கூடிய விதிமுறைகளின் கீழ் பரிசீலிக்கப்படும். சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெறும் காலகட்டத்தில் மட்டுமே, படிவம் 6-உடன் இணைக்கப்பட்டுள்ள Declaration Form பயன்படுத்தப்பட வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறாத காலகட்டத்தில், வாக்காளர் படிவங்களே பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, தற்போது நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் உறுதிமொழிப் படிவம் (Declaration Form) பயன்படுத்தத் தேவையில்லை.

புதுச்சேரி இளம் / முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது வாக்காளர்
பட்டியலில் தங்களைப் பதிவு செய்து கொள்ளாதவர்கள், இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களைப்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOS) களப்பணிக்காக வருகை தரும் போது, பொதுமக்கள் அவர்களுக்கு அவர்களுக்கு ஒத்துழைத்து, வாக்காளர் சேர்க்கையை எளிதாக்குவதற்குத் தேவையான தகவல்களை வழங்குவார்கள். வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான எளிதான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்ய, புதுச்சேரி தேர்தல் துறை தொடர்ந்து அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top