Times of Puducherry

உங்க கரண்ட் பில் எகிறுதா? இந்த 7 மின் சாதனங்களை இப்படி பயன்படுத்துங்க.! பில் 50% குறையும்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 2:28 PM
seven essential devices to reduce electricity bills in tamil nadu and usage tips

தமிழகத்தில் பலருக்கும் மின் கட்டணம் அதிகரித்து உள்ளதை நம்மால் காணமுடிகிறது. மின்சார கட்டணத்தை குறைக்க உதவும் ஏழு முக்கியமான சாதனங்கள் பற்றியும், அவற்றை சரியாக பயன்படுத்தும் வழிகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசி 

மாறிவிட்ட காலநிலையால் பலரது வீட்டிலும் ஏசி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஏசியை எப்போதும் 24 முதல் 26 டிகிரி வெப்ப நிலையில் இயக்க வேண்டும். வெப்பநிலை அமைப்பை 1°C உயர்த்தும் பொழுது சுமார் 6% மின்சாரம் சேமிக்கப்படுகிறது. பயன்பாட்டின் போது சீலிங் பேனை குறைந்த வேகத்தில் இயக்கினால் குளுமை சீராக பரவும். தூசி படிந்த ஏசி அதிக மின்சாரத்தை பயன்படுத்தும். எனவே ஏசியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

ஃபிரிட்ஜ்

ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து வீடுகளிலும் ஃபிரிட்ஜ் இருக்கிறது. ஃபிரிட்ஜின் பின்புறம் சுவரில் ஒட்டாமல் காற்றோட்டமாக இருப்பதற்கு இடைவெளி விட்டு வைக்க வேண்டும். சூடான உணவுகளை அப்படியே உள்ளே வைக்கக்கூடாது. அடிக்கடி திறப்பதை தவிர்த்து, ரப்பர் பீடிங் சரியாக மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனால் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்படாது.

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்களை குறைந்த அளவு துணிகளுக்கு பயன்படுத்தாமல் முழு கொள்ளளவு துணிகள் சேர்ந்த பிறகு இயக்க வேண்டும். சுடு தண்ணீர் மோடை தவிர்த்து சாதாரணமாக துவைப்பது மின்சாரப் பயன்பாட்டை கணிசமாக குறைக்கும். சிலர் தினசரி துவைக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். அதை விடுத்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை துணிகளை துவைப்பது மின்சார பயன்பாட்டைக் குறைக்க உதவும்.

பழைய ஃபேன் மற்றும் டியூப் லைட்கள்

பழைய ஃபேன் மற்றும் டியூப் லைட்களுக்கு பதிலாக 5 ஸ்டார் BLDC பேன்கள் மற்றும் எல்இடி விளக்குகளை பயன்படுத்த வேண்டும். சாதாரண பேன்களை விட BLDC ஃபேன்கள் 50% வரை குறைந்த மின்சாரத்தையே உறிஞ்சும்.

வாட்டர் கீஸர்

தேவைக்கு பத்து நிமிடங்களுக்கு மட்டும் போட்டுவிட்டு பயன்படுத்தியவுடன் வாட்டர் கீஸர்களை முழுமையாக உடனடியாக அணைத்து விட வேண்டும். ஆட்டோமேட்டிக் கட் ஆஃப் வசதி கொண்ட 5 ஸ்டார் கீஸர்களை தேர்ந்தெடுப்பது உங்கள் மின் கட்டணத்தை பாதியாக குறைக்க உதவும்.

டிவி செட் ஆஃப் பாக்ஸ் & வைஃபை ரூட்டர்

டிவி செட் ஆஃப் பாக்ஸ், வைஃபை ரூட்டர், மொபைல் சார்ஜர் ஆகியவற்றை பயன்படுத்திவிட்டு சுவிட்சை கண்டிப்பாக அணைக்க வேண்டும். ஸ்டாண்ட் பை மோடில் இருக்கும் சாதனங்கள் தொடர்ந்து மின்சாரத்தை பயன்படுத்திக் கொண்டே இருக்கும்.

மைக்ரோவேவ் மற்றும் இன்டக்‌ஷன் 

சமைப்பதற்கு முன்னர் உறைந்த உணவுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பின்னர் மைக்ரோவேவ் அவன் அல்லது இன்டக்ஷனில் சமைக்க வேண்டும். ஃப்ரோசன் நிலையில் இருக்கும் உணவுகளை மீண்டும் சூடு செய்வதற்கு நீண்ட நேரமாகலாம். இதனால் மின்சாரம் அதிகமாக செலவாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top