Times of Puducherry
மத்திய கலாச்சார அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டு துறை சார்பில் “சேவை விழா – பாரதப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047” நிகழ்ச்சி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வந்தே மாதரம் தேசிய பாடலின் நாட்டிய வடிவ டிஜிட்டல் ஒளிப் பேழையை துணைநிலை ஆளுநர் வெளியிட்டார். மேலும், சேவை விழா 2025 ஒட்டி நடத்தப்பட்ட மாநில அளவிலான ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற ஓவியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் பெ. ராஜவேலு, கலை பண்பாட்டு துறை இயக்குனர் சக்திவேல், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் மண்டல இயக்குனர் சுமித் தே ஆகியோர் பங்கேற்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.