Times of Puducherry
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது இந்திய அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் – DGE, ஆல் புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ளது. படித்த மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஓராண்டு கால உதவித்தொகையுடன் கூடிய இலவச, அலுவலக ஆட்டோமேஷன், கணக்கியல் மற்றும் பதிப்பக உதவியாளர் வணிகக் கணக்கியலில் கணினி பயன்பாடு(Computer application business accounting), இணையப் பாதுகாப்புடன் கூடிய வலை மேம்பாட்டு உதவியாளர்(Cyber secured web development associate) NCVT சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி திட்டத்தின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது .
படித்த வேலையற்ற SC/ST பிரிவைச்சேர்ந்த வேலை தேடும் மாணவர்களுக்கு, இம்மையத்தின் மூலம் வழங்கப்படும் ஓராண்டு கால ஊக்கத்தொகையுடன் கூடிய, இலவச, அலுவலகஆட்டோமேஷன், கணக்கியல் மற்றும் பதிப்பக உதவியாளர்(Office automation, accounting and publishing assistan), வணிகக் கணக்கியலில் கணினி பயன்பாடு(Computer application business accounting), இணையப் பாதுகாப்புடன் கூடிய வலை மேம்பாட்டு உதவியாளர்(Cyber secured web development associate). NCVT இப்பயிற்சி திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி, 2026 முதல் தலைசிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படவுள்ளது. உதவித்தொகையுடன் கூடிய சான்றிதழ்களுடன் கூடிய இப்பயிற்சியில் சேர, ஆர்வமுள்ள பன்னிரண்டாம் வகுப்புதேர்ச்சி மற்றும் பட்ட படிப்பை முடித்த மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இம்மையத்தில் வழங்கப்படுகிறது.
இச்சிறப்புமிக்க பயிற்சிக்கான வயதுவரம்பு 18-30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக் காலத்தில் பிரதி மாதம் ரூ.1000/-ஊக்கத்தொகை மற்றும் பயிற்சி புத்தகங்கள், வழங்கப்படும். NCVT சான்றிதழுடன் கூடிய இப்பயிற்சியில் சேர ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்படுகின்றது. இப்பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நீடிக்க பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை அனைத்து மாணவர்களும்பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இப்பயிற்சி வகுப்பிற்கு முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மேலும் விபரங்களுக்கு துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி அணுக வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.