Times of Puducherry
சனி பகவானின் நேரடி சஞ்சாரம் குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. அது எந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் நேரடி சஞ்சாரம்
வேத ஜோதிடத்தில் சனி பகவான் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகவார். இவர் கர்ம வினைகள் மற்றும் நீதிமானாகவும் விளங்கி வருகிறார். இவரின் மாற்றமும், தாக்கமும் மிக வீரியமாக இருக்கும். அதனால் தான் சனிப் பெயர்ச்சி என்றாலே பலருக்கும் அச்சம் ஏற்படுகிறது. சனி கொடுத்தாலும் நிறைய கொடுப்பார், பிரச்சினை என்றாலும் நிறைய பிரச்சனைகளைத் தருவார்.
ஜூலை 27, 2026 மீன ராசியில் வக்ர நிலையில் (பின்னோக்கி) பயணித்து வரும் அவர், 138 நாட்கள் கழித்து டிசம்பர் 11 மீண்டும் நேரடி இயக்கத்திற்கு மாறுகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பொன்னான மாற்றங்களும், நற்பலன்களும் உண்டாக இருக்கின்றன. அந்த ராசிகள் யார்? அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? என்பது குறித்து கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 12 ஆம் வீட்டில் நேரடியாக சஞ்சரிக்க இருக்கிறார். இதனால் சிறப்பான பலன்கள் உங்களைத் தேடி வரும். நீண்ட காலமாக வாட்டி வதைத்து வந்த பண நெருக்கடிகள் முடிவுக்கு வரும். தேவையற்ற விரயங்கள் கட்டுக்குள் வரும். சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் அதிகரிக்கும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். புதிய நிலங்கள் அல்லது சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உகந்த காலமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மூன்றாம் வீட்டில் நேரடி பயணத்தைத் தொடங்குகிறார். எனவே பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் முக்கிய திருப்புமுனைகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். எதிரிகள், போட்டியாளர்கள் குறைவார்கள். தைரிய ஸ்தானம் என்பதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமண வாழ்வில் அன்னோன்யமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் அதிபதியே சனி பகவான் என்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு அவரது நேரடி மாற்றம் நன்மைகளை தரக்கூடியதாக அமைய இருக்கிறது. நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் காலத்தின் அருள் மற்றும் அதிர்ஷ்டம் முழுமையாக துணை புரியும். உங்களின் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உயர்ந்து அனைத்து சவால்களையும் எளிதில் வென்று காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை சீராகி, சேமிப்பு உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு நல்ல நேரமாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.