Times of Puducherry
பெரிய எதிர்பார்ப்புக்கு இடையெ வெளியான கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் பின்தங்கிய நிலையில், தற்போது இந்த படம் ஒ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம சர்தார். கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் 2-ம் பாகமாக சர்தார் 2 கடந்த செப்டம்பர் 10-ந் தேதி வெளியானது. முதல் படத்தை போலவே கார்த்தி 2 வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியானது,
முதல் நாளிலே இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இதனால் வசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. திரையரங்கில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, ‘சர்தார் 2’ ஓடிடி-க்கு வருகிறது. 120 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்குகளில் வசூலில் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த படம் தற்போது ஓடிடி-யில் வெளியாகிறது. கார்த்தியின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக ‘சர்தார் 2’ அமைந்துள்ளது.
அக்டோபர் 1 முதல் இத்திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. திரையரங்குகளில் வெளியான மூன்று வாரங்களுக்குள்ளேயே படம் ஓடிடி-க்கு வருகிறது. 2022-இல் வெளியான ஸ்பை-ஆக்ஷன் திரைப்படமான ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகமாக, கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரனே இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தால் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற முடியாமல் போனது.
கார்த்தியின் திரைப்பயணத்தில் இது தொடர்ச்சியான இரண்டாவது தோல்விப் படமாகும். இதற்கு முந்தைய படமான ‘வா வாத்தியாரும்’ மிக விரைவிலேயே ஓடிடி-யில் வெளியானது. ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியான அப்படம், ஜனவரி 28 அன்றே ஓடிடி-க்கு வந்தது. சமீப காலத்தில் வெளியான ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படம், மிக விரைவாக ஓடிடி-யில் வெளியாவது ‘சர்தார் 2’ படத்தின் மூலமாகவே நடக்கிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.