Times of Puducherry

Sani Peyarchi 2027: அடுத்த ஆண்டு சனி பெயர்ச்சியால் அதிகமாக பாதிக்கப்படப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
22 Sep 2026 • 11:40 AM
sani peyarchi 2027 saturn transit aries ezharai sani relief and impact signs

Sani Peyarchi 2027: சனி பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் பொழுது சில ராசிகளுக்கு ஏழரை சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால் சில ராசிகளுக்கு ஏழரை சனியின் தாக்கம் தொடங்கும். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2027 முதல் சனி பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகள்

வேத ஜோதிடத்தின் படி சனியின் ஏழரை சனி காலம் மிக கடினமான காலகட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏழரை சனியின் காலகட்டத்தில் ஒருவர் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும் என நம்பப்படுகிறது. மேலும் ஏழரை சனியின் காலத்தை பொறுமையுடனும், நிதானத்துடனும் கடப்பவர்களுக்கு சனி பகவான் அவர்களின் கஷ்டங்களுக்கும், பட்ட துன்பங்களுக்கும் நிவாரணத்தை வழங்குவார் என்றும், கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

சனி பெயர்ச்சி 2027

2026 ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசியில் இருக்கிறார். அவர் 2027-ம் ஆண்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். இந்த காலகட்டத்தில் சில ராசிகள் ஏழரை சனியிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். அதே நேரத்தில் மற்ற சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்க இருக்கிறது. ஜோதிட கணக்கீடுகளின் படி ஜூன் 3, 2027 அன்று சனி பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முழுமையாக நிவாரணம் பெறுவார்கள்.

ரிஷபம்

அதே சமயம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. இதன் காரணமாக மன மற்றும் நிதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் பணிகளை முடிக்க அதிக முயற்சி எடுக்க நேரிடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அல்லது வேலையில் ஏற்படும் தாமதங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். சில பணிகள் முடிவுக்கு வந்தாலும் விரும்பிய வெற்றி கிடைக்காமல் போவது ஏமாற்றத்தை அளிக்கும். இந்த காலகட்டத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். உடல் நலனில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேஷம் மற்றும் மீனம்

சனி பகவான் நேரடியாக மேஷ ராசியின் ஜென்ம ஸ்தானத்தில் அமர இருக்கிறார். சனி பகவானுக்கு மேஷ ராசி என்பது நீச்ச வீடாகும். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைப்பளு, மன உளைச்சல், அவசர முடிவுகளால் தடைகள் ஏற்படலாம். மீன ராசிக்காரர்களுக்கு இது ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனியாகும். அவர்களும் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி யாருக்கு?

சனிப்பெயர்ச்சிக்கு பின்னர் கன்னி ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. எனவே உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். ஏழரை சனி முடிவுக்கு வரும் வரை புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். மறைமுக எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். மகர ராசிக்காரர்களுக்கு அத்தாஷ்டம சனி தொடங்கும் காலமாகும். எனவே தாய் வழியில் ஆரோக்கிய குறைபாடு, சொத்து அல்லது வாகனம் சார்ந்த விஷயங்களில் விரயங்கள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.

ஏழரை சனி காலக்கட்டத்தில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

சனி பகவான் அளிக்கும் கஷ்டங்களில் இருந்து நிவாரணம் பெற விரும்புபவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து அவரை மனதார வழிபட வேண்டும். சனிக்கிழமைகளில் கருப்பு நிறப்பொருட்களை தானமாக அளிக்கலாம். சனி பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபடவும். ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் மன வலிமையை அதிகரிக்கும். கருப்பு எள், உளுந்து, எண்ணெய், கொண்டை கடலை ஆகியவற்றை ஏழை, எளிய மக்களுக்கு தானமாக அளிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top