Times of Puducherry

“Repair – Reuse – Reduce”

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Sep 2026 • 10:40 PM
recycle-second life

மத்திய அரசின் “Swachhata Hi Seva – 2026” இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி நகராட்சி மற்றும் Feedback Foundation நிறுவனத்துடன் இணைந்து “Repair & Reuse Mela” நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக, பொதுமக்களிடம் உள்ள பழுதடைந்த பொருட்களை தூக்கி எறியாமல், அவற்றை பழுது நீக்கி மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் கழிவு உருவாவதை குறைத்து, பொருட்களுக்கு “Second Life” வழங்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 12 பிரத்யேக “Repair Counters” அமைக்கப்பட்டு மின் சாதனங்கள், மின்னணு சாதனங்கள், பைகள் மற்றும் குடைகள், தையல் மற்றும் துணி, காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அன்றாட பயன்பாட்டுப் பொருட்களுக்கு பழுதுபார்ப்பு சேவைகள் வழங்கப்பட்டன.

“Repair – Reuse – Reduce”

இந்நிகழ்வில் சுமார் 208 பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களிடம் இருந்த பழுதடைந்த பொருட்களை பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தினர். கழிவுகளை குறைத்து, பயன்படுத்தக்கூடிய பொருட்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் இம்முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இதுபோன்ற “Repair & Reuse Mela” நிகழ்ச்சிகளை ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிகழ்வை புதுச்சேரி நகராட்சி ஆணையர் திரு. K.P. ஸ்ரீஜித் அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். V. ஆர்த்தி அவர்கள் மேற்பார்வையிட்டார். “Repair – Reuse – Reduce” என்ற கருத்தை பொதுமக்களிடையே ஊக்குவித்து, பயன்படுத்தக்கூடிய பொருட்கள் கழிவாக மாறுவதைத் தடுப்பதுடன், தூய்மையான மற்றும் நிலையான புதுச்சேரியை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top