Times of Puducherry

"கடவுள் கொடுத்த அரிய திறமை": இந்திய கிரிக்கெட்டின் இளம் புயலைப் பார்த்து வியந்த ரஷீத் கான்!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
17 Sep 2026 • 9:04 AM
Rashid Khan on Vaibhav Sooryavanshi god given gift

இந்தியக் கிரிக்கெட்டின் இளம் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள 15 வயதான வைபவ் சூர்யவன்சியை ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இளம் வயதிலேயே அச்சமற்ற ஆட்டம் மற்றும் அபாரமான ஷாட் செலக்சன் கொண்ட அவரை "கடவுள் தந்த அரிய திறமை" (God-gifted talent) என்று புகழ்ந்துள்ளார்.

"வைபவ் சூர்யவன்சி அச்சமில்லாத கிரிக்கெட்டைப் ஆடுகிறார். தன் திறமை மீது அவருக்கு அபார நம்பிக்கை உள்ளது. எந்த சூழ்நிலையிலும், எந்த பந்துவீச்சாளருக்கு எதிராகவும் தெளிவான திட்டத்துடன் களமிறங்குகிறார். மிகக் குறைந்த வயதிலேயே இத்தகைய ஷாட் செலக்சன் அமைவது மிகவும் அரிது. அனுபவத்தின் மூலமே இது சாத்தியமாகும், ஆனால் அவர் அதை ஏற்கனவே இயல்பாகவே பெற்றிருக்கிறார்." என்று அவர் கூறியுள்ளார்.

ஹேண்ட்-ஐ கோ ஆர்டினேஷன், பவர்:

மேலும் வைபவ்வின் தனித்துவமான ஆட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ரஷீத் கான், "அவரிடம் உள்ள பவர் மற்றும் ஹேண்ட்-ஐ கோ ஆர்டினேஷன் (Hand-eye coordination) மிகவும் வித்தியாசமானது. மற்ற வீரர்களிடம் இதைப் பார்ப்பது கடினம். அவர் உண்மையிலேயே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு திறமைசாலி" என்று கூறினார்.

ஆப்கானிஸ்தான் அணியின் எதிர்காலம்:

இந்தியாவுடனான தொடருக்கு இடையே பேசிய ரஷீத் கான், இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் வரிசையாக உருவெடுத்து வருவது எதிரணிகளுக்குப் பெரிய சவாலாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பவர் பிளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்துவது மற்றும் பெரிய இலக்குகளை நோக்கி அணியை எடுத்துச் செல்வதில் ஆப்கானிஸ்தான் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top