Times of Puducherry
செப்டம்பர் 23ஆம் தேதி கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரன் இணைவதால் கிரகண யோகம் உருவாகிறது. இதன் காரணமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Grahan Yog 2026
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சேர்க்கையால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கை கிரகண யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் அசுப யோகமாக கருதப்படுகிறது.
கிரகண யோகம் எப்போது உருவாகிறது?
செப்டம்பர் 23ஆம் தேதி அன்று சந்திர பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணித்து வருகிறார். ராகு சந்திரன் கூட்டணியால் உருவாகும் கிரகண யோகத்தால் சில ராசிக்காரர்களின் நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகள் காணப்படலாம். அந்த ராசிகள் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்திரன் உங்கள் ராசியின் எட்டாம் வீட்டில் சஞ்சரித்து ராகுவுடன் இணைகிறார். இதன் காரணமாக உங்கள் செலவுகள் திடீரென அதிகரிக்கும். சமூகத்தில் இருந்த உங்கள் நற்பெயர் பாதிக்கப்படும். வாழ்வில் எதிர்மறை விளைவுகள் அதிகமாக இருக்கும். தொழில் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் ஆறாம் வீட்டில் ராகுவும் சந்திரனும் இணைந்து கிரகண யோகத்தை உருவாக்குகின்றனர். ஜாதகத்தில் ஆறாம் வீடு எதிரிகள், நோய்கள் மற்றும் தடைகளை குறிக்கிறது. இந்த கிரகண யோகம் நிகழும் பொழுது உங்கள் எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக பணியிடத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சிறு கவனக்குறைவு பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நிதி விஷயங்களில் மற்றவர்களை நம்புவதை தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கிரகண யோகம் அதிகமான எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். உங்கள் ஜாதகத்தின் 12 ஆம் வீட்டில் ராகு சந்திரன் சேர்க்கை நிகழ இருக்கிறது. இது நிதி இழப்புக்குரிய வீடாக கருதப்படுகிறது. விரய ஸ்தானம் என்பதால் உங்கள் சேமிப்பு விரைவாக கரையக்கூடும். தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் கவனக் குறைவை தவிர்க்க வேண்டும். வேலையில் ஏற்படும் கவனச் சிதறல்கள் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.