Times of Puducherry

இனி 28 நாள் ரீசார்ஜ் தொல்லை இல்லை; செல்போன் பயனர்களுக்கு ராகவ் சதா அறிவித்த 'சூப்பர்' செய்தி!

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
28 Sep 2026 • 1:23 PM
Raghav Chadha Prepaid Users Get 30 Day Recharge Plans

செல்போன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 28 நாட்களுக்குப் பதிலாக, முழுமையாக 30 நாட்கள் செல்லுபடியாகும் (Validity) ரீசார்ஜ் பிளான்களைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி வழங்க வேண்டும் என்ற நடைமுறை குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சதா முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

28 நாட்கள் திட்டத்தால் நுகர்வோருக்கு இழப்பு:

முன்னதாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்களுக்குப் பதிலாக 28 நாட்கள் மட்டுமே கெடு கொண்ட மாதாந்திர பிளான்களை வழங்கி வந்தன. இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்டிற்கு 12 மாதங்களுக்குப் பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

ராகவ் சதா எம்.பி மேற்கொண்ட முயற்சி:

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் (TRAI) ராகவ் சதா தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். 28 நாட்கள் கொண்ட திட்டம் நுகர்வோரை மறைமுகமாகப் பாதிக்கும் செயல் என்றும், மாதத்திற்கு முழுமையாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

டிராய் (TRAI) விதிகளின் படி புதிய மாற்றம்:

இதன் தொடர்ச்சியாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் திட்டத்தையாவது முழுமையாக 30 நாட்கள் கெடுவுடன் (30-day validity) வழங்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

வருடத்திற்கு 12 ரீசார்ஜ் மட்டுமே: இனி பயனர்கள் ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக, வழக்கம்போல 12 முறை மட்டுமே ரீசார்ஜ் செய்தால் போதுமானது.

பயனர்களுக்குச் சேமிப்பு: இந்த மாற்றத்தின் மூலம் நாட்டின் கோடிக்கணக்கான ப்ரீபெய்ட் செல்போன் வாடிக்கையாளர்களுக்குப் பணமும் நேரமும் மிச்சமாகும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த இந்த வெற்றியை ராகவ் சதா எம்.பி வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகவ் சதா எம்.பி பேசுகையில், “புதிய டெலிகாம் நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்தம்) விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 30 நாள் ரீசார்ஜ் திட்டங்கள், ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப பல வசதிகளை வழங்கும். குறிப்பாக, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டுமே பயன்படுத்துவோருக்கும், டேட்டா தேவையில்லாத குறைந்த பட்ஜெட் நுகர்வோருக்கும் இது பெரும் பலனளிக்கும்.

முன்னதாக, 28 நாட்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்ததால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்யும் நிதிச்சுமை இருந்தது. இந்த புதிய 30 நாள் திட்டங்களால், ஆண்டுக்கான ரீசார்ஜ் எண்ணிக்கையை 13-லிருந்து 12 ஆகக் குறையும். நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்பியதன்பேரில், நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசுக்கும், டிராய் அமைப்புக்கும் நன்றி” என்று அவர் கூறினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top