Times of Puducherry

Purattasi Matha Rasi Palan: புரட்டாசி மாதம் யாருக்கு சூப்பராகவும், யாருக்கு சுமாராகவும் இருக்கும்? முழு பலன்கள்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 6:43 AM

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இந்த மாதம் தொடக்கத்தில் ராசிநாதன் செவ்வாய், வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் அமர்கிறார். எனவே நீங்கள் தொட்டது அனைத்தும் துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் செய்ய நினைத்த அனைத்தையும் செய்ய இயலும். புரட்டாசி மூன்றாம் தேதி செவ்வாய் நீச்சம் பெற்று குருவோடு இணைகிறார். அஷ்டமாதிபதி செவ்வாய் நீச்சம் பெற்றாலும், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பதன் அடிப்படையிலே மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மேலும் நீச்சபங்க ராஜயோக அடிப்படையிலும், விபரீத ராஜயோக அடிப்படையிலும் திட்டமிடாமலேயே காரியங்கள் வெற்றி பெறும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது, கட்டிட பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். தொழில் உத்தியோகம் மிகச் சிறப்பாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில்  முருகப்பெருமானையும், சனிக்கிழமைகளில் விஷ்ணுவையும் வழிபட வேண்டும். 

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, புரட்டாசி மாதம் உங்களுக்கு பணபலம் நன்றாக இருக்கும். வருமானம் உயரும். புகழ் கூடும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வரலாம். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்கள், வெளியில் வந்து நல்ல தொழிலைத் தொடங்குவீர்கள். அதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செவ்வாய் பகவான் விரய வீட்டில் இருந்தாலும் அதற்கு ஏற்ப பணம் வந்து கொண்டே இருக்கும். உடன்பிறப்புகள் வழியே நல்ல காரியம் நடக்கும். இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அயல்நாட்டு முயற்சிகள் கைகூடும்.

பரிகாரம்: பிரதோஷ காலங்களில் சிவ வழிபாட்டையும், சனிக்கிழமைகளில் விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதனான புதன் உச்சம் பெற்றிருக்கிறார். மேலும் புதனோடு சூரியன் இணைந்து இருப்பதால் புதாதித்ய யோகம் உண்டாகிறது. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். திருமணத்திலிருந்த தடைகள் அகலும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். இடம் வாங்கி வீடு கட்ட முடியாதவர்கள் வீடு கட்டும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இரண்டில் உச்சம் பெற்ற குருவால் மனப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் வந்து மறையும். தாய் வழியில் ஆதரவு குறையும்.

பரிகாரம்: அம்பிகை வழிபாட்டையும், அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

கடகம்

கடக ராசியிலேயே குரு உச்சம் பெற்று இருக்கிறார். எனவே இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக அமையும். தொட்டது அனைத்தும் துலங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அடுத்தடுத்து மனதை மகிழ்விக்கும் செய்திகள் வந்து சேரும். கேது மற்றும் ராகு பெயர்ச்சி விரைவில் நிகழ இருக்கிறது. அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் சில சமயங்களில் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம். இருந்தாலும் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். 

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு பகவானை வழிபட்டு குரு கவசம் படித்து வருவதால் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே புரட்டாசி மாதம் முழுவதும் நீங்கள் கவனத்துடனும், விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியது அவசியம். பிள்ளைகள் வழியில் விரயம் ஏற்படலாம். இருப்பினும் அது சுப விரயமாக இருக்கும். மங்கல இசை மனையில் கேட்கவில்லை என்று கவலைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். இடமாற்றம், வீடு மாற்றம் தேடி வரலாம். சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் சனியின் வலிமை குறைகிறது. எனவே நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கரைந்த சேமிப்புகளை ஈடு கட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு வழியில் சிலருக்கு சிக்கல்கள் ஏற்படலாம். 

பரிகாரம்: மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்பதும், மகாலட்சுமி தாயாரை வழிபடுவதும் நல்லது.

கன்னி

கன்னி ராசியின் நேயர்களே, இந்த மாதம் நீங்கள் எண்ணியது அனைத்தும் நிறைவேறும் மாதமாக இருக்கும். சனி சூரிய பார்வை இருப்பதால் சில சங்கடங்கள் வந்து நீங்கும். திடீர் செலவுகள் வரலாம். மாதத்தின் தொடக்கத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். எதிர்மறை சிந்தனைகள் விலகும். விஸ்வரூப ஆஞ்சநேயரை தரிசிப்பது பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

பரிகராம்: குலதெய்வ வழிபாடு ஆஞ்சநேயர் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். புதனும் சுக்கிரனும் இணைவதால் புத சுக்கிர யோகம் உருவாகும். புரட்டாசி ஆறு முதல் பொன் குவிகிற நேரமாகும். செவ்வாய் மற்றும் குரு இணைந்து குரு மங்கள யோகம் உருவாவதால் திருமண கனவுகள் நனவாகும். வேலையில் இருந்த தொய்வு அகலும். இடம் மற்றும் பூமியால் லாபம் கிடைக்கலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு அல்லது துர்க்கை வழிபாடு செய்வது சிறந்தது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். குரு மங்கள யோகமும், நீச்ச பங்க யோகமும் புத சுக்கிர யோகமும் உருவாகிறது. இதன் காரணமாக தொழில் வளம் சிறக்கும். எதிரிகள் விலகுவார்கள். நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றங்கள் கிடைக்கும். 

பரிகாரம்: வியாழக்கிழமை விரதம் இருந்து குரு பகவானுக்கு கவசம் பாடி வழிபட நன்மைகள் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, அஷ்தமத்தில் குரு இருக்கிறார். ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பதால் உங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. இருப்பினும் அஷ்டம ஸ்தானத்தில் குரு இருப்பதால் மனக்கவலைகள் அதிகரிக்கலாம். எடுக்கும் காரியங்களில் தடைகள் ஏற்படலாம். செவ்வாய் பார்வை ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குருவின் பார்வை இரண்டாம் இடத்தில் பதிவதால் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானம் புனிதம் அடைகிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். புதன் பகவான் ஆறாம் தேதி 11-ம் இடத்திற்கு வருகிறார். பத்தாமிடத்தில் அதிபதி 11ஆம் இடத்திற்கு வருவதால் தொழில் வளம் சிறக்கும். 

பரிகாரம்: சனிக்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.

மகரம்

மகர ராசி நேயர்களே இந்த மாதம் நினைத்த அனைத்தையும் செய்து முடிக்கும் மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் சுப செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். பிள்ளைகளின் திருமணம், பெற்றோர்களின் மணி விழாக்கள், உடன் பிறப்புகளின் வீட்டில் விசேஷம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் வரலாம். மாற்றங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை வழிபாடு செய்வது சிறப்பு.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இந்த மாதம் அன்பும், ஆதரவும் கிடைக்கும் மாதமாக இருக்கும். சனி பகவான் வக்ரம் பெறுவதால், விரயங்கள் கொஞ்சம் குறையும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் ஒரு காரியத்தை தொடங்கி விட்டால், அதை செய்து முடித்து பணம் வந்து சேரும். கடைசி நேரம் வேலைகள் முடிவதால் மனக்கவலைகள் அதிகரிக்கும் கொடுக்கல் வாங்கல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். மாத கடைசியில் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். 

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனி பகவானை வணங்குவதோடு, லட்சுமி ஹயக்ரீவரை வணங்குவது சிறப்பு.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு புரட்டாசி மாதம் யோகமான மாதமாக இருக்கும். சனி பகவானின் வக்ர நிலை காரணமாக ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்துடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வீர்கள். பொருளாதாரத்தை பெருக்கும் வழிகள் உண்டாகும். கடன் சுமை பாதியாக குறையும். மறைமுக எதிரிகள் இருப்பார்கள். எனவே எந்த ஒரு தொகை தகவலையும் முன்னதாகவே யாரிடம் சொல்லக் கூடாது. மாதத்தின் பிற்பகுதியில் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்வது, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்புகளைத் தரும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top