Times of Puducherry

புதுவை தமிழ் சங்க தேர்தல் இன்று மாலை முடிவு தெரியும் விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
6 Sep 2026 • 4:59 PM

புதுவை தமிழ் சங்கத்திற்கு புதிய ஆட்சி மன்ற குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது இதில் தமிழ் சங்க உறுப்பினர்கள் காலை முதல் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். புதுவை தமிழ்ச்சங்கம் 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 58 ஆண்டுகளை கடந்துள்ளது. புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்காக பாவேந்தர் பாரதிதாசன் பாடுபட்டார். அதன் பின்னர், அவரது மகன் மன்னர் மன்னன் தமிழ் சங்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராகவும் இருந்தார், புதிய தமிழ் சங்கத்திற்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில். அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதுச்சேரி தமிழ் சங்க ஆட்சி மன்ற குழு நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் சங்கத்தின் 1,189 வாழ்நாள் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாலை

5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 11 நிர்வாகப் பொறுப்புகளுக்கு 17 பேர் போட்டியிடுகின்றனர். இதில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் மற்றும் 5 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 2026 முதல் 2029-ம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளாகும். தேர்தலில் போட்டியிடும் தமிழ் சங்கத் தலைவர் முத்து கூறுகையில், கடந்த 5 முறை தேர்தலில் போட்டியிட்ட நிலையில், தற்போது 6-வது முறையாக போட்டியிடுவதாக தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top